Sunday 8 December 2013

12 ஜோதிர் லிங்கம்(4.அருள்மிகு பீமாசங்கரர் திருக்கோயில்)

அருள்மிகு பீமாசங்கரர் திருக்கோயில்


தல வரலாறு:

மூன்று அரக்கர்கள் பிரம்மாவைக் குறித்துத் தவம் இருந்தனர். அவருடைய 

அருளினால் இணையற்ற பலத்தைப் பெற்றனர். நினைத்த நேரத்தில் நினைத்த 

இடத்துக்குச் செல்லும் ஆற்றலையும் பெற்றனர். தேவர்களுக்கும் 

முனிவர்களுக்கும் இடையூறு விளை வித்தனர். தாங்கொணாத துன்பம் 

அனுபவித்த தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். அந்த மூன்று 

அரக்கர்களையும் அழிக்கச் சிவபெருமான் மாபெரும் உருத்தாங்கி, பல 

ஆயுதங்களுடன் போரிட்டார். சிவபெருமான் எடுத்த உருவம் அச்சுறுத்தும் 

வகையில் அமைந்திருந்தது. அதனால் தான் டாகினி என்றும் இந்தத் தலத்தைச் 

சொல்லுவார்கள். அதனால் இறைவனுக்குப் பீமசங்கரர் என்ற திருநாமம் 

உண்டாயிற்று. தேவர்களும் முனிவர்களும் வேண்ட அங்கேயே தங்கி அருள் 

புரியத் தொடங்கினார் இறைவன். கும்பகர்ணனுக்கும் கற்கபி என்ற அரக்கிக்கும் 

பிறந்த பீமன், தன் தாய் வழிப் பாட்டனை சுதீக்ஷ்ணன் என்ற முனிவரும், பெரிய தந்தை ராவணனை ராமனும் கொன்றனர் என்பதை அறிந்து, 

அந்தணர்களையும் அரசர்களையும் அழிக்க எண்ணி, நான்முகனை நோக்கித் தவம் செய்து, அவன் அருளால் வலிமை பெற்றான்.

தன்னிகர் இல்லாத பலம் பெற்றதும் மன்னர்களைத் துன்புறுத்தத் 

தொடங்கினான். காமரூபத்து இந்தத் தம்பதி சிறந்த சிவ பக்தர்கள். சிறையிலும்

 இவர்கள் சிவபூஜை செய்தார்கள். இப்படிப் பூஜை செய்ய அனுமதித்தால் 

சிவபெருமான் அருளால், தன்னையே, அழிக்கக்கூடும் என்று உணர்ந்து, 

பூஜையை நிறுத்தும்படி கட்டளை யிட்டான் பீமன். அவர்கள் அவன் சொல்லைக் 

கேட்கவில்லை. அதனால் கோபம் கொண்ட பீமன், அவர்களை வெட்ட வாளை

 உருவினான். அவர்கள் வழிபட்டுவந்த லிங்கத்திலிருந்து சிவ பெருமான் 

தோன்றிப் பீமனைச் சங்கரித்தார். அந்த அரச தம்பதிகளின் வேண்டுகோளின்படி

 அங்கேயே கோயில் கொண்டார். பீமனைச் சங்கரித்ததால் பீம சங்காரம் என்ற 

திருநாமம் உண்டாயிற்று.

தலபெருமை:


பீமன் என்னும் அரக்கனுக்காக, சிவபெருமான் இங்கே தோன்றி 

ஜோதிர்லிங்கமாக விளங்குவதால் பீமாசங்கரம் எனப் பெயர் பெற்றது. இந்த 

திருக்கோயில் ஒரு கானகத்தின் நடுவே அமைந்துள்ளது. புனேயிலுள்ள கேத் 

என்ற இடத்துக்கு வட மேற்கே முப்பது மைல் தொலைவில் போவாகிரி என்ற 

கிராமம் இருக்கிறது. அந்தக் கிராமத்தின் புறத்தே இந்தக் கானகம் 

அமைந்திருக்கிறது. பீமா அல்லது சந்திரபாகா நதியின் தோற்று வாயில் இந்தக் 

கோயில் உள்ளது. நானாபட்னாவிஸ் என்ற பக்தர் இந்த ஆலயத்தைக் 

கட்டினார். புனேயிலிருந்து பஸ்ஸிலும் போகலாம். வெளிப்புறத் தரை 

மட்டத்துக்குக் கீழே, ஒரு முழ உயரத்தில் கருப்பக்கிருகத்தில்  இந்த லிங்கம் 

அமைந்திருக்கிறது. அமைதியான, மனதுக்கு இதம் அளிக்கும் சூழ்நிலை.

கோயில் மிகவும் பழமையானது. முக்கிய சாலையிலிருந்து மூன்று கி.மீ. தூரம் 

கீழே படிக்கட்டு மூலம் இறங்க வேண்டும். மலைச்சரிவுப் பள்ளத்தாக்கில் 

கோயில் உள்ளது. கோயில் தனியே உள்ளது. பக்கத்தில் எதுவும் இல்லை. 

போகும் வழியில் படிக்கட்டில் உள்ள கடைகள்தாம். மலைக் காட்டுப்பகுதி. 

கோயிலின் வலதுபக்கம் பீமாநதி, சிறு ஓடைபோல ஓடுகிறது. சிறு தொட்டியில் 

நீரைத் தேக்கிவைத்து பக்தர்கள் நீராடுகின்றனர். மேலும் மோட்ச குண்டம், சர்வ 

தீர்த்தம், குடசாரண்ய தீர்த்தம் உள்ளன. கோயில் கோபுரம் வாழைப்பூ போன்று,

 கூம்பு வடிவில் மிக உயரமாக உள்ளது. மிகவும் அழகிய, மிக நுட்பமான சிற்ப 

வேலைப்பாடுகளுடன் கோயில் திகழ்கின்றது. போவாகிரி என்ற சிற்றூர் இதன் 

அருகே உள்ளது. தற்போது கோயிலுக்குப் பக்கத்தில் ஒரு ராமர்கோயில் 

கட்டப்பட்டுள்ளது. சலவைக் கல்லினாலான இராமர், சீதை முதலானோர் 

விக்கிரகங்கள் உள்ளன. இந்துக்களின் புனித யாத்திரைத்தலம். பீமாசங்கரம் 

கோயில் முன்மண்டபம் விசாலமாகவுள்ளது. கர்ப்பகிரகத்தின் உள்ளேயும் 

மூலத்தான இடம் பூமி மட்டத்திற்குக் கீழ் அமைந்துள்ளது. *படிக்கட்டிறங்க 

வேண்டும் - விசாலமாக உள்ளது. பூமியை ஒட்டியே சிவலிங்க ஆவுடையார் 

வட்டமாக உள்ளது.  சிவலிங்கம் சுமார் ஓர் அடி உயரமே உள்ளது. பக்தர்கள் 

சிவலிங்கத்தைச் சுற்றிலும் வட்டமாக அமர்ந்து, சிவலிங்கத்திற்கு அபிஷேகம், 

அர்ச்சனை, தீபாராதனை செய்ய முடியும். ஆண், பெண் அனைவரும் உள்ளே 

செல்லலாம். ஆனால் ஆண்கள் சட்டைபோடாமல் செல்ல வேண்டும். 

இம்மலையில் மூலிகைகளின் காற்று வீசுகிறது. வழிக்கடைகளில் மூலிகை 

மருந்து விற்கிறார்கள்.

No comments:

Post a Comment