Monday 30 December 2013

திருவெம்பாவை

திருவெம்பாவை




மாணிக்கவாசகர் மதுரைக்கு அருகிலுள்ள திருவாதவூரில் பிறந்தார். இதனால் இவருக்குத் திருவாதவூரர் என்ற பெயரும் உண்டு. இவரின் நூல்களான 

திருவாசகமும், திருக்கோவையாரும் சைவத்திருமுறைகள் பன்னிரண்டினுள் 

எட்டாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலையில் இவர் 

பாடிய பாடல்களே திருவெம்பாவை எனப்படுகின்றன. இப்பாடல்களில் 

தன்னை ஒரு பெண்ணாகப் பாவித்து மார்கழி மாதக் காலையில் சிவனைக் 

குறித்துப் பாடுவது போல் பாடியுள்ளார்.

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
      சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
      மாதேவன்வார்கழல்கள் வாழ்த்தியவாழ்த்தொலிபோய்
விதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
      போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னேஎன்னே
      ஈதே எம்தோழி பரிசேலோ ரெம்பாவாய்.1



பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
      பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
      சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசுமிடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
      கூசு மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
      ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோ ரெம்பாவாய். 2


முத்தன்ன வெண்ணகையாய் முன்வந்தெதிரெழுந்தென்
      அத்தன் ஆனந்தன் அமுதனென் றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துள் கடை திறவாய்
      பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த்தாட்கொண்டாற்பொல்லாதோ
      எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
      இத்தனையும் வேண்டும் எமக்கேலோ ரெம்பாவாய். 3


ஒள்நித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
      வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
      கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
      கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோ ம் நீயேவந்(து)
      எண்ணிக் குறையில் துயிலேலோ ரெம்பாவாய். 4


மாலறியா நான்முகனும் காணா மலையினைநாம்
      போலறிவோ மென்றுள்ள பொக்கங்க ளேபேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடை திறவாய்
      ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டும்
      சீலமும் பாடிச் சிவனே சிவனே என்(று)
ஓலமிடினும் உணராய் உணராய்காண்
      ஏலக் குழலி பரிசேலோ ரெம்பாவாய். 5

மானேநீ நென்னலை நாளைவந் துங்களை
      நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
      வானே நிலனே பிறவே அறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்
      வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
      ஏனோர்க்கும் தங்கோனைப் பாடேலோ ரெம்பாவாய். 6

அன்னே இவையும் சிலவோ பல அமரர்
      உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
      தென்னாஎன் னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்
      சொன்னோம்கேள் வெவ்வேறாயின்னந்துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
      என்னே துயிலின் பரிசேலோ ரெம்பாவாய். 7


கோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும்
      ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
      கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழியீ தென்ன உறக்கமோ வாய்திறவாய்
      ஆழியான் அன்புடைமை யாமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
      ஏழைபங் காளனையே பாடேலோ ரெம்பவாய். 8


முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளே
      பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீரடியோம்
      உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எங்கணவ ராவார் அவர் உகந்து
      சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
      என்ன குறையு மிலோமேலோ ரெம்பாவாய். 9




பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
      போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
      வேதமுதல் விண்ணோரும் மண்ணுந் துதித்தாலும்
ஓதஉலவா ஒருதோழன் தொண்டருளன்
      கோதில் குலத்தரன்றன் கோயிற்பிணாப் பிள்ளைகாள்
ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
      ஏதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய். 10




மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
      கையால் குடைந்து குடைந்து உன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோம்காண் ஆரழல்போல்
      செய்யாவெண் ணீறாடி செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
      ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
      எய்யாமல் காப்பாய் எமையேலோ ரெம்பாவாய். 11




ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும்
      தீர்த்தன்நற் றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும்
      காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
      ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
      ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோ ரெம்பாவாய். 12




பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
      அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
      எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
      சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
      பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய். 13

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
      கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
      வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
      ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன் 
      பாதத் திறம்பாடி ஆடேலோ ரெம்பாவாய். 14

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
      சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
      பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற் கிங்ஙனே பித்தொருவ ராமாறும்
      ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
      ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய். 15

முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
      என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையா ளிட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேல்
      பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
      தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள்நமக்கு முன் சுரக்கும் இன்னருளே
      என்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய். 16

செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
      எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
      இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதந் தந்தருளும் சேவகனை
      அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
      பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய். 17



அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
      விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற் போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
      தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
      விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
      பெண்ணே இப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய். 18

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்(று)
      அங்கப் பழஞ்சொல் புதுக்கும்எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம் கேள்
      எம்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லா தெப்பணியும் செய்யற்க
      கங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
      எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய். 19

போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
      போற்றி அருளுகநின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றிஎல் லாஉயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
      போற்றிஎல் லாஉயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றிஎல் லாஉயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
      போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
      போற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய். 20 








Sunday 29 December 2013

64 சிவ வடிவங்கள்( 25.சார்த்தூலஹர மூர்த்தி)

 25.சார்த்தூலஹர மூர்த்தி




          தாருவனத்தில் வாழ்ந்து வந்த முனிவர்களை மோகினி அவதாரமெடுத்த 

திருமால் சோதித்தார். அம்முனிவர்களின் ரிஷிபத்தினிகளை பிட்சாடன 

அவதாரமெடுத்து சிவபெருமான் சோதித்தார். இதனையெல்லாம் 

ஞானதிருஷ்டியில் கண்ட முனிவர்கள் வேள்வியால் சிவபெருமானை 

அழிக்கமுடிவு செய்தனர். எனவே பிறர்க்கு தீங்கு செய்யக்கூடிய அபிசார 

ஹோமம் வார்த்தனர். அதிலிருந்து இடிமுழக்கம் போன்ற சத்தத்துடன், 

கூர்மையான பற்கள், அகண்ட வாய், தீச்சுடர் பொங்கும் விழிகளுடன் ஒரு புலி 

வந்தது. அதனைக் கொண்டு சிவபெருமானிடம் ஏவினர். அதனை அடக்கிய 

சிவபெருமான் அதனைக் கொன்று தோலினை ஆடையாக்கினார். மீண்டும் 

எவற்றையும் எதிர்க்கும் இணையில்லா மழு எனும் ஆயுதத்தை ஏவினர். 

அதனை சிவபெருமான் தனது படையாக மாற்றினார். பின் மான் வான் 

மார்க்கமாக உலகமே அச்சுறுத்தும்படி வந்தது. அதைத்தனது இடக்கரத்தில் 

ஏந்தினார். பின் நாகம் வந்தது அதனை ஆபரணமாக்கி அணிந்துக் கொண்டார். 

பின் அடக்கமுடியாத பூதகணங்களை ஏவினர். அவையும் சிவபெருமானின் 

படைப்பரிவாரமாகின. பின்னர் வெண்ணிற மண்டையோடு உலகமே 

அதிரும்படி வந்தது. அதை அடக்கி தன் தலையில் அணிந்தார்.

பின்னர் கர்ணகடூர ஓசையுடன் துடி (உடுக்கை) அனுப்பினர். அதனை 

தனதாக்கினார். பின் முயலகனை ஏவினர். அதனைக்கண்ட சிவபெருமான் 

நெருப்பைக் கையில் ஏந்தியபடி முயலகனைத் தன் காலினால் நிலத்தில் 

தள்ளி அதன் முதுகில் ஏறி நின்றார். இனியும் சிவபெருமானை ஒன்றும் செய்ய 
இயலாது என்<றுணர்ந்த முனிவர்கள் திகைத்தனர். முண்டகன் அசைந்ததால் 

சிவபெருமான் நடனம் ஆட ஆரம்பித்தார். இதனைக் கண்ட முனிவர்கள் 

அவரைச் சரணடைந்தனர். சிவபெருமான் அவர்களுக்கு மன்னிப்பை வழங்கி 

ஆசி கூறி அனுப்பினார். பின் அவரவர் இருப்பிடம் திரும்பினர். முனிவர் ஏவிய 

புலித்தோலை ஆடையாகக் கொண்ட கோலத்தை நாம் சார்த்தூலஹர மூர்த்தி 

என்கிறோம்.

கோயில்:


          மாயவரம் அருகே அமைந்த வழுவூரில் தான் தாருவனத்து முனிவர்கள் 

ஏவிய புலியை அடக்க இங்கு சிவபெருமான் தோன்றினார். இங்குள்ள 

மூலவரின் பின்னால் அபிசார இயந்திரம் உள்ளது. அதற்கு சந்தன காப்பிட்டு 

வழிபட பில்லி, சூனிய செய்வினை முறியும். ஏழு பிரதோஷம் இறைவனுக்கு 

அபிசேக ஆராதனை செய்ய இழந்த சொத்துக்கள் மீண்டும் கைவரும். தும்பை, 

வில்வார்ச்சனையும், தயிரன்ன நைவேத்தியமும் திங்கள், வியாழக் 

கிழமைகளில் செய்ய மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் 

இம்மூர்த்திக்கு ருத்திராட்ச அபிசேகம் செய்ய செய்வினை அக<லும் முடியும்.



Wednesday 25 December 2013

12 ஜோதிர் லிங்கம்(5.அருள்மிகு திரியம்பகேஸ்வரர் திருக்கோயில்)

அருள்மிகு திரியம்பகேஸ்வரர் திருக்கோயில்





பிரம்மகிரியில் கவுதமர் என்ற மகா தவசியும் முனிவருமானவர், தமது 

மனைவி அகல்யாவுடன் தபோவனம் அமைத்துத் தவம் செய்துவந்தார். 

அவரது தவவலிமையால் பிரம்மகிரிப் பகுதியில் மழை பெய்து செழிப்பாக 

இருந்தது. மற்றப்பகுதிகளில் மழையில்லாமல் பஞ்சம் ஏற்பட்டு குடிப்பதற்குக் 

குடிநீர் கூடக் கிடைக்காமல் மக்கள் தவித்தனர். இதனால் தமது தினசரிப் 

பூஜைகளைச் செய்ய முடியாத பல முனிவர்கள் வேறு இடங்களிலிருந்து 

இங்கு வந்து குடியேறினார்கள். தம் குடும்பத்துடன் வந்து முனிவர்களை, 

கவுதமரும் அன்புடன் வரவேற்று அப்பகுதியில் தபோவனம் அமைத்து நன்கு 

வாழ வைத்தார். காலம் செல்லச் செல்ல ஒருசில முனிவர்கள் கவுதமர் மீது 

பொறாமை கொண்டனர். அவரது தவ வலிமையைக் குறைக்க வேண்டும். 

அவரை எப்படியாவது இப்பகுதியினின்றும் விரட்டி விட வேண்டும் என 

எண்ணினர். அதில் ஒரு முனிவருக்கு விநாயகரை வரவழைக்கும் மந்திரம் 

தெரியும். எனவே எல்லோரும் ஒன்று சேர்ந்து யாகம் செய்து, விநாயகரை 

வரவழைத்துத் தங்களது வேண்டுதலைக் கூறினார்கள். விநாயகர் 

முனிவர்களது எண்ணம் தவறானது என்றும், அதனால் தீங்கு ஏற்படும் என 

அறிவுரை கூறிச் சென்று விட்டார். முனிவர்கள் விடுவதாக இல்லை. பார்வதி 

தேவியின் தோழிகளில் ஒருவரான ஜெயா என்ற வன தேவதையை 

வரவழைத்து, ஒரு பசுவாக உருவெடுத்து கவுதமமுனிவர் ஆசிரமத் 

தோட்டத்தில்மேயும்படிச் செய்தனர். தோட்டத்தில் ஒரு பசு மேய்வதைக் 

கண்ட கவுதமமுனிவர் தர்ப்பைப் புல்லால் பசுவை விரட்டினார். மாயப் 

பசுவானதால் பசு இறந்தது போல் நடித்துப் படுத்துக் கிடந்தது. மற்ற 

முனிவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, கவுதம முனிவர் மேல் பசுவைக் 

கொன்றதாகக் குற்றம் சாட்டினர். பசுவைக்கொன்ற தோஷம் நீங்க பிரம்மகிரி 

மலையை 108 முறை சுற்றி வரவேண்டும் எனவும், 1008 லிங்கங்கள் வைத்துப் 

பூசை செய்ய வேண்டும் எனவும் கூறினர்.


கிரியைப் சுற்றப் போதுமான வலிமையில்லாமையினால் கவுதமர், 1008 

மண்லிங்கங்களை வைத்து விரதமிருந்து சிவபெருமானை வைத்து 

வழிபட்டார். கடும் தவம் மேற்கொண்டார். சிவபெருமான் குற்றமற்ற கவுதம 

முனிவர்முன் தோன்றினார். தீயமுனிவர்கள் எண்ணம் தவறு என்றும், 

கவுதமருக்குப் பசுவைக் கொன்ற தோஷம் இல்லை என்றும் கூறினார். 

கவுதமரும் மகிழ்ந்து ஈசனிடம் தீய முனிவர்களின் தீய எண்ணம் மறையவும், 

அவர்கள் செய்த தவறின் தோஷம் அவர்களை விட்டு நீங்கவும், நாடு 

செழிப்பாக ஆகி மக்கள் பஞ்சமின்றி வாழவும் அருள் புரிய வேண்டும் எனவும் 

வரம் கேட்டார். சிவபெருமான் தமது ஜடாமுடியினின்றும் சிறிது 

கங்காதீர்த்தம் வரவழைத்துக் கவுதமரிடம் கொடுத்துச் சென்றார். 

சிவபெருமான் கொடுத்த நீரே ஆறாகப் பெருகி ஓடியது. அதுவே கோதாவரி 

அல்லது கவுதம நதி என்று கவுதமரின் பெயரால் தற்போது விளங்குகிறது. 

அந்தக் கோதாவரி நதி நீரில் மூழ்கி கவுதமர் தாம் இழந்த தபோ பலமெல்லாம் 

பெற்றார். தீய முனிவர்களையும் அவர்கள் தோஷம் நீங்க நீராடக் கூறினார். 

ஆனால் கோதாவரி நதி நீர் மறைந்துவிட்டது. கவுதமர் மீண்டும் 

தர்ப்பைப்புல்லைத் தக்க மந்திர உபதேசம் செய்து மறைந்த கோதாவரி நீர் 

குசாவர்த்தகம் என்னும் இடத்தில் தோன்றச்செய்து, தீய முனிவர்களை அதில் 

நீராட வைத்து அவர்கள் தோஷம் நீங்கச் செய்தார். அதன்பிறகு நாடு செழித்து 

நாட்டு மக்கள் பஞ்சமின்றி வாழ, கோதாவரி நதியாக நாட்டில் ஓடச் செய்தார். 

அதன்படியே இன்றும் பிரம்மகிரியில் உற்பத்தி ஆகும் கோதாவரி, முதலில் 

ல மர வேரிலிருந்து தோன்றி, மலைக்குள் சிறு தொட்டியில் நிறைந்து, பின் 

மீண்டும் மறைந்து குசாவர்த்தம் என்னும் குளத்தில் வெளிப்படுகிறது. பின்பு 

கோதாவரி நதியாகத் திரியம்பகேசுவரர் கோயில் முன்பு கோடி தீர்த்தமாக 

உருவெடுத்து, இன்றும் ஓடுகிறது.

இந்தக் கதையே வேறு விதமாகவும் சொல்லப்படுகிறது. போதிய மழை 

இல்லாமையால், உலகத்தின் நன்மையின் பொருட்டு கவுதம முனிவர், தம் 

மனைவி அகல்யையுடன் பிரம்மகிரியில் கடுந்தவம் செய்தார். வருணன் 

கட்டளைப்படி ஒரு குளத்தை உருவாக்கினார். வருணனின் அருளால், அந்தக் 

குளத்தில் வற்றாமல் நீர் சுரந்தது. நீர் வளம் மிகுந்து அவருடைய ஆசிரமம் 

செழிக்கத் தொடங்கியது. மற்ற முனிவர்களும் தம் தம் பத்தினிகளுடன் இங்கே 

வந்து தங்கினர். சில நாட்களில் ரிஷி பத்தினிகளுக்குள் விரோதம் 

உண்டாயிற்று. அகல்யையின் கர்வத்தை அடக்க, அவளை இந்த இடத்தை 

விட்டே துரத்த வேண்டும் என்று மற்ற ரிஷிபத்தினிகள் தீர்மானித்து, 

விநாயகரின் நியாயத்தை எடுத்துக் கூறியும் அவர்கள் கேட்கவில்லை. பசு 

உருத் தாங்கிய விநாயகர், கவுதமர் பயிரிட்டிருந்த செடிகளைப் போய் 

மேய்ந்தார். பசுவைத் துரத்தக் கோலுடன் கவுதமர் ஓடியதுமே, அந்த மாயப் பசு 

உயிர் துறந்தது. அதனால் பசுவதை செய்த தோஷம் ஏற்பட்டு விட்டதாக மற்ற 

முனிவர்கள் கூறினார்கள். இந்த தோஷம் நீங்க, பிரம்ம கிரியை 101 முறை 

வலம் வரவேண்டுமென்றும், ஒரு கோடி மண் லிங்கங்களைப் பிடித்து 

வணங்க வேண்டுமென்றும், கங்கையை இந்த இடத்துக்கு வரவழைக்க, 

வேண்டுமென்றும், அந்த முனிவர்கள் கூறினார்கள். கவுதமரும் கடுந்தவம் 

இயற்றத் தொடங்கினார். அவருடைய தவத்துக்கு இரங்கி, சிவபெருமான் 

தரிசனம் அளித்தார். ரிஷி பத்தினிகளின் கெட்ட எண்ணத்தைக் கூற, தோஷம் 

எதுவும் கிடையாது என்றும் சொன்னார். தம் சடை முடியிலிருந்து சிறிதளவு 

கங்கா நீரையும் கொடுத்தார். அந்த நீரைப் பிரம்மகிரியில் வளர்ந்திருந்த பெரிய 

அத்தி மரத்தின் வேரில் விட்டார் கவுதமர். கங்கை பெருகத் தொடங்கிற்று. 

கவுதமர் இந்த நதியைக் கொண்டு வந்தமையால் கோதாவரி அல்லது கவுதமி 

என்று அழைக்கப்படுகிறது. தம்மிடமிருந்த குசத்தினால் (தர்ப்பை) கங்கையின் 

போக்கை மாற்றி, மற்ற முனிவர்களும் தூய்மையடையச் செய்தார் கவுதமர். 

பவித்ர தேசம் என்று அழைக்கப்படும் இந்தத் தல மூர்த்தியைத் தரிசித்தால் 

மனமாசுகள் அகன்று ஆன்ம ஒளி சிறக்கும்.

Sunday 22 December 2013

64 சிவ வடிவங்கள்(24. ஜ்வராபக்ன மூர்த்தி)

24. ஜ்வராபக்ன மூர்த்தி








மாபலி மன்னனின் மகன் வாணாசுரன். அவனுக்கு  ஆயிரம் கைகள் உண்டு. 

அவனது மனைவி   சுப்ரதீகை. அவன் நர்மதை  நதியோரத்தில்  ஒரு 

சிவலிங்கம் அமைத்து  அதற்கு தினமும்  ஆயிரம் முறை  அர்ச்சனை செய்து 

 வந்தான். சிவபெருமான் காட்சி கொடுத்து என்ன வரம் வேண்டும் என்று 

கேட்டார்.  அதற்கு உலகம் முழுவதும் அரசாட்சி செய்யவும், நெருப்பினால் 

ஆன மதில் சுவரும், அழிவற்ற நிலையும், தேவர் அடித்தாமரை  அன்பும் 

வேண்டுமெனக் கேட்டான்.  அதன்படியே கொடுத்தார். இதனால் உலகம் 

முழுவதையும் தன் வசம் கொண்டான். மீண்டுமொருமுறை சிவபெருமானை 

தரிசிக்க விரும்பி வெள்ளிமலை அடைந்தான். 

அங்கு  ஆயுரம் கைகளிலும் குடமுழா வாசித்தான். மீண்டும்  சிவபெருமான் 

 என்ன வரம் வேண்டும் என்று கேட்டதிற்கு   இறைவா தாங்கள் தங்கள் 

குடும்பத்தினருடன் எனது சோணிதபுரத்தில் வசிக்க வேண்டும் என்றுக் 

கேட்டான்.  பின் சிவபெருமான்  குடும்ப சமேதராய் அவனது 

மாளிகையிலேயே  வாழ்ந்து வந்தார். இந்நிலையில்  வாணாசுரன் தேவர் 

உலகத்தினர் அனைவரையும் போருக்கு  இழுத்து தோற்கடித்ததால் 

 அனைவரும் ஓடி விட்டனர். எøவே தன்னுடன்  போர்புரியும் படி சிவனை 

அழைத்தான் . சிவனோ எனக்கு பதிலாக கண்ணன் வருவான் என்றார். 

கண்ணன் எப்பொழுது வருவான்? என்று கேட்டார். சிவனும் உன் மகள் 

கண்ணன் மகனை விரும்புவாள்  அந்த செய்தி கிடைக்கும் போது வருவான் 

என்றார். அதன்படி நடைபெற்றது. வாணாசுரனின் மகள் உஷைக்கும், 

கண்ணன் மகன் அநிருத்தக்கும் காதல் ஏற்பட்டது. இதனையறிந்த கண்ணன் 

வாணாசுரனுடன் போர்புரிய வந்தான். முதலில் உள்ள வாசலில் விநாயகனை 

வணங்கினான்.  இரண்டாம் வாசலில் முருகனை வணங்கினான். மூன்றாம் 

வாசலில் உமாதேவியரிடம் ஆசி வாங்கி உள் சென்றான். அங்கே நான்காவது 

 வாசலில் சிவபெருமானை கண்டான். உடன் சிவபெருமான் சண்டைக்கு 

கண்ணனை அழைத்தார்.

கண்ணன் பின் வாங்கினான். இருப்பினும் சிவபெருமான் தேற்றி, 

வாணாசுரனிடம் நடைபெறும் சண்டையில் நீயே வெல்வாய், அதற்கு முன் 

எண்ணிடம் போர் புரி என்ற படியே இருவருக்கும் போர் நடைபெற்றுக் 

கொண்டே யிருந்தது.  எத்தனைக் காலமேன யாராலும் சொல்ல முடியாத படி 

நீண்டது. முடிவில்  சிவபெருமான் ஒதுங்க போர்  நின்றது. பின் 

வாணாசுரனுடன் படு பயங்கரப் போர் நடைப்பெற்றது. இறுதியில்  அவனது 

கரங்கள் ஒவ்வொன்றும் துண்டானது. சிவனை தொழுத கைகள் மட்டும் 

வெட்டாமல் விடப்பட்டது. மனமாறிய வாணாசுரன்  மன்னிப்பு வேண்ட, 

மன்னிக்கப்பட்டு  மறுபடியும் அவனது கரங்கள் இணைந்தன. அவன் 

மறுபடியும் குடமுழா வாசிக்க பணியமர்த்தப் பட்டான். அவனது மகள் 

உஷைக்கும், கண்ணன் மகன் அநிருத்தனுக்கும் திருமணம் நடைபெற்றது. 

கண்ணன் - சிவபெருமான் இடையே நடைபெற்ற போரில் தொடுத்த  சீதள 

சுரத்தை, சிவபெருமான் விட்ட உஷ்ண சுரமானது  ஒரு கணத்தில் வென்றது. 

அது மூன்று சிரம், நான்கு கரம், ஒன்பது விழிகள், மூன்று  கால்களுடன் 

இருந்தது. தீராத  சுரம் கண்டோர் இந்த வடிவை வணங்க சுரம் குறையும். 

இவ்வுருவமே ஜ்வராபக்ன மூர்த்தி யாகும்.  அவரை  நாகபட்டிணம் 

அருகேயுள்ள சாட்டியகுடியில் காணலாம்.  வேதநாயகி இறைவி 

திருநாமமாகும். வெப்ப நோய்க்குரிய தேவதை  ஜ்வர தேவர்  ஆவார். 

 இங்குள்ள அவரை வணங்க  வெப்ப நோயின்  தீவிரம் குறையும். வெள்ளை 


அல்லி அர்ச்சனையும்,  சுக்கு கசாய நைவேத்தியமும்  புதன் சோம 

வாரங்களில் கொடுக்க நோய் தீரும். மேலும் இறைவனுக்கு  பசுந்தயிர் 

 அபிசேகம் செய்ய  சுரம் குறையும்.

Sunday 8 December 2013

12 ஜோதிர் லிங்கம்(4.அருள்மிகு பீமாசங்கரர் திருக்கோயில்)

அருள்மிகு பீமாசங்கரர் திருக்கோயில்


தல வரலாறு:

மூன்று அரக்கர்கள் பிரம்மாவைக் குறித்துத் தவம் இருந்தனர். அவருடைய 

அருளினால் இணையற்ற பலத்தைப் பெற்றனர். நினைத்த நேரத்தில் நினைத்த 

இடத்துக்குச் செல்லும் ஆற்றலையும் பெற்றனர். தேவர்களுக்கும் 

முனிவர்களுக்கும் இடையூறு விளை வித்தனர். தாங்கொணாத துன்பம் 

அனுபவித்த தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். அந்த மூன்று 

அரக்கர்களையும் அழிக்கச் சிவபெருமான் மாபெரும் உருத்தாங்கி, பல 

ஆயுதங்களுடன் போரிட்டார். சிவபெருமான் எடுத்த உருவம் அச்சுறுத்தும் 

வகையில் அமைந்திருந்தது. அதனால் தான் டாகினி என்றும் இந்தத் தலத்தைச் 

சொல்லுவார்கள். அதனால் இறைவனுக்குப் பீமசங்கரர் என்ற திருநாமம் 

உண்டாயிற்று. தேவர்களும் முனிவர்களும் வேண்ட அங்கேயே தங்கி அருள் 

புரியத் தொடங்கினார் இறைவன். கும்பகர்ணனுக்கும் கற்கபி என்ற அரக்கிக்கும் 

பிறந்த பீமன், தன் தாய் வழிப் பாட்டனை சுதீக்ஷ்ணன் என்ற முனிவரும், பெரிய தந்தை ராவணனை ராமனும் கொன்றனர் என்பதை அறிந்து, 

அந்தணர்களையும் அரசர்களையும் அழிக்க எண்ணி, நான்முகனை நோக்கித் தவம் செய்து, அவன் அருளால் வலிமை பெற்றான்.

தன்னிகர் இல்லாத பலம் பெற்றதும் மன்னர்களைத் துன்புறுத்தத் 

தொடங்கினான். காமரூபத்து இந்தத் தம்பதி சிறந்த சிவ பக்தர்கள். சிறையிலும்

 இவர்கள் சிவபூஜை செய்தார்கள். இப்படிப் பூஜை செய்ய அனுமதித்தால் 

சிவபெருமான் அருளால், தன்னையே, அழிக்கக்கூடும் என்று உணர்ந்து, 

பூஜையை நிறுத்தும்படி கட்டளை யிட்டான் பீமன். அவர்கள் அவன் சொல்லைக் 

கேட்கவில்லை. அதனால் கோபம் கொண்ட பீமன், அவர்களை வெட்ட வாளை

 உருவினான். அவர்கள் வழிபட்டுவந்த லிங்கத்திலிருந்து சிவ பெருமான் 

தோன்றிப் பீமனைச் சங்கரித்தார். அந்த அரச தம்பதிகளின் வேண்டுகோளின்படி

 அங்கேயே கோயில் கொண்டார். பீமனைச் சங்கரித்ததால் பீம சங்காரம் என்ற 

திருநாமம் உண்டாயிற்று.

தலபெருமை:


பீமன் என்னும் அரக்கனுக்காக, சிவபெருமான் இங்கே தோன்றி 

ஜோதிர்லிங்கமாக விளங்குவதால் பீமாசங்கரம் எனப் பெயர் பெற்றது. இந்த 

திருக்கோயில் ஒரு கானகத்தின் நடுவே அமைந்துள்ளது. புனேயிலுள்ள கேத் 

என்ற இடத்துக்கு வட மேற்கே முப்பது மைல் தொலைவில் போவாகிரி என்ற 

கிராமம் இருக்கிறது. அந்தக் கிராமத்தின் புறத்தே இந்தக் கானகம் 

அமைந்திருக்கிறது. பீமா அல்லது சந்திரபாகா நதியின் தோற்று வாயில் இந்தக் 

கோயில் உள்ளது. நானாபட்னாவிஸ் என்ற பக்தர் இந்த ஆலயத்தைக் 

கட்டினார். புனேயிலிருந்து பஸ்ஸிலும் போகலாம். வெளிப்புறத் தரை 

மட்டத்துக்குக் கீழே, ஒரு முழ உயரத்தில் கருப்பக்கிருகத்தில்  இந்த லிங்கம் 

அமைந்திருக்கிறது. அமைதியான, மனதுக்கு இதம் அளிக்கும் சூழ்நிலை.

கோயில் மிகவும் பழமையானது. முக்கிய சாலையிலிருந்து மூன்று கி.மீ. தூரம் 

கீழே படிக்கட்டு மூலம் இறங்க வேண்டும். மலைச்சரிவுப் பள்ளத்தாக்கில் 

கோயில் உள்ளது. கோயில் தனியே உள்ளது. பக்கத்தில் எதுவும் இல்லை. 

போகும் வழியில் படிக்கட்டில் உள்ள கடைகள்தாம். மலைக் காட்டுப்பகுதி. 

கோயிலின் வலதுபக்கம் பீமாநதி, சிறு ஓடைபோல ஓடுகிறது. சிறு தொட்டியில் 

நீரைத் தேக்கிவைத்து பக்தர்கள் நீராடுகின்றனர். மேலும் மோட்ச குண்டம், சர்வ 

தீர்த்தம், குடசாரண்ய தீர்த்தம் உள்ளன. கோயில் கோபுரம் வாழைப்பூ போன்று,

 கூம்பு வடிவில் மிக உயரமாக உள்ளது. மிகவும் அழகிய, மிக நுட்பமான சிற்ப 

வேலைப்பாடுகளுடன் கோயில் திகழ்கின்றது. போவாகிரி என்ற சிற்றூர் இதன் 

அருகே உள்ளது. தற்போது கோயிலுக்குப் பக்கத்தில் ஒரு ராமர்கோயில் 

கட்டப்பட்டுள்ளது. சலவைக் கல்லினாலான இராமர், சீதை முதலானோர் 

விக்கிரகங்கள் உள்ளன. இந்துக்களின் புனித யாத்திரைத்தலம். பீமாசங்கரம் 

கோயில் முன்மண்டபம் விசாலமாகவுள்ளது. கர்ப்பகிரகத்தின் உள்ளேயும் 

மூலத்தான இடம் பூமி மட்டத்திற்குக் கீழ் அமைந்துள்ளது. *படிக்கட்டிறங்க 

வேண்டும் - விசாலமாக உள்ளது. பூமியை ஒட்டியே சிவலிங்க ஆவுடையார் 

வட்டமாக உள்ளது.  சிவலிங்கம் சுமார் ஓர் அடி உயரமே உள்ளது. பக்தர்கள் 

சிவலிங்கத்தைச் சுற்றிலும் வட்டமாக அமர்ந்து, சிவலிங்கத்திற்கு அபிஷேகம், 

அர்ச்சனை, தீபாராதனை செய்ய முடியும். ஆண், பெண் அனைவரும் உள்ளே 

செல்லலாம். ஆனால் ஆண்கள் சட்டைபோடாமல் செல்ல வேண்டும். 

இம்மலையில் மூலிகைகளின் காற்று வீசுகிறது. வழிக்கடைகளில் மூலிகை 

மருந்து விற்கிறார்கள்.

64 சிவ வடிவங்கள்(23. கஜயுக்த மூர்த்தி)

23. கஜயுக்த மூர்த்தி







கயாசுரன் எனும் அசுரன் காளமேகம் போன்றதொரு யானை உருவம் 

ஏற்றவன். அவன் மேருமலையின் மேல் நான்முகனை நினைத்து கடும்தவம் 

மேற்க்கொண்டான்.  உடன் நான்முகன் தோன்றினான் கயாசுரன் யாராலும் 

 அழிவில்லா  நிலையும் எதிலும்  வெற்றி கிடைக்கவும் வரம் கேட்டான். உடன் 

கிடைத்தது. ஆனால் சிவனை மட்டும்  எதிர்ப்பாயானால் நீ இறப்பாய்  என்ற 

கடுமையான தண்டனையும் கிடைத்தது. அவன் தனதுவேலைகளைக் காட்டத்

 தொடங்கினான். சிவபெருமானை விடுத்து அனைவரிடத்திலும் தன் 

தொல்லைகளையும், கொடுமைகளையும் தொடர்ந்தான். இந்திரனும் 

அவனிடம்  போரிட முடியாமல் தோற்றான்.  உடன்  அவனது வாகனமான 

ஐராவத்தின் வாலைப் பிடித்திழுத்து தூர எறிந்தான். பின் அமராவதி நகரை 

அழித்தான். அதோடு தன் குலத்தாரையும், இராட்சதக் கூட்டத்தினரையும் 

உலகமக்கள் அனைவரையும் கொடுமைப் படுத்தினான்.  பாதிக்கப்பட்டோர் 

சிவபெருமானிடம் சரணடைந்தனர். அவரைத் தேடி காசிக்கு சென்றனர். அங்கே

 யொரு ஆலயத்தில் சிவபெருமான் பார்வதி தேவியிடன் வீற்றிருந்தார். 

 வந்தவர்கள் அனைவரும் சிவபெருமான்  முன்  இறைவா! எங்களைக் காக்க 

வேண்டும். நான்முகனிடம் அழியாவரம் வாங்கிய தயாசுரன்  இங்கு வந்து 

கொண்டுள்ளான்.  அவனை அழித்து எங்களைக் காக்க வேண்டும் என்று 

மன்றாடினர். பின்னாலேயே வந்த கயாசுரன் தான் எதிர்க்கக் கூடாதது 

சிவபெருமான் என்பதை  அக்கணத்தில்  மறந்தான். ஆலயவாசல் முன் நின்று 

 அனைவரும் பயப்படும் படியாக  கர்ண கொடுரமாக சத்தமிட்டான்.  இதனைக் 

கேட்டோர் சிவபெருமானைத் தழுவிக்கொண்டனர். அவர்களுக்கு ஆறுதல் 

கூறியபடியே  தேவகணத்தினரே பயப்படும் படியாகப் பெரிய வடிவம் எடுத்தார். 

அனைவரும் பயப்படும் படி கண்களின் வழியே தீ சுவாலைகள் தெரித்தது

கயாசுரனை தனது திருவடியால் உதைக்க, அவன் கழிந்த கோலத்தில் உலகின் 

மீது விழுந்தான். மற்றொரு திருவடியால் அவனது  தலையை மிதித்து 

தொடையில் ஊன்றியவாறே  தனது நகங்களால்  பிளந்து அவனது தோலை 

கதறக் கதற உரித்திழுத்தார். அச்சமயத்தில் பார்வதி தேவியே அஞ்சினார். 

 அவரது தோற்றத்தைக் கண்டோர் கண்ணொளி இழந்தனர். கயாசுரனின் 

தோலை தன் மீது போர்த்தி சாந்த மடைந்தார். கயாசுரனின் தொல்லை நீக்கப் 

பெற்றோர் நிம்மதியுடன் தங்களது இருப்பிடம் சென்றனர். கஜாசுரனுடன் 

சண்டையிட்டு  வென்றதால்  அவரது பெயர்  அவரது பெயர்  கஜயுக்த மூர்த்தி 

யாகும்.   அவரை தரிசிக்க திருவழுவுர் செல்ல வேண்டும்.  இங்கே 

 தாரகாபுரத்து  முனிவர்கள்  யாகத்தில் தோன்றிய  யானையைச்  சிவனாரே 

 அழிக்க ஏவினார். சிவபெருமான் இதனால் அணிமாசித்தி மூலம் யானையின் 

உடலில் சென்று, பின் உடலைக் கிழித்தப் படி வெளி வந்தார்.  எனவே அவரை 

 கஜசம்கார மூர்த்தி என்றும்  அழைப்போம். இங்குள்ள கஜசம்ஹார மூர்த்திக்கு 

 அபிசேக ஆராதனை செய்ய  சனீஸ்வர தோஷம் விலகும். ஏழரை சனியின் 

 கொடுமையில் இருந்து தப்பிக்கலாம். 12 அமாவாசை  காலையில் விஸ்வ ரூப 

தரிசனம் பார்த்தால்  குழந்தை  பாக்கியம் கிட்டும். அருகம்புல் அர்ச்சனையும், 

பாயாச நைவேத்தியமும் சோம வாரங்களில்  கொடுக்க   எதிரி தொல்லை 

தீரும். கஜசம்கார மூர்த்திக்கு  எழுமிச்சை சாறு அபிசேகம் செய்தால் மரண 

பயம் தீரும்..