Friday 28 February 2014

அருள்மிகு வல்வில்ராமன் திருக்கோயில்

அருள்மிகு வல்வில்ராமன் திருக்கோயில்


தல சிறப்பு:

பொதுவாக ராமர் நின்ற கோலத்தில் தான் அருள்பாலிப்பார். ஆனால் 

இத்தலத்தில் ராமர் சயன கோலத்தில் அருள்பாலிக்கிறார்.இக்கோயில் 

சோழர்களால் கட்டப்பட்டது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய 

தேசங்களில் இது 10 வது திவ்ய தேசம்



தலபெருமை:


ஜடாயுவாகிய புள்ளிற்கு ராமன் மோட்சம் கொடுத்து ஈமக்கிரியை செய்த

 நிகழ்வை குறிக்கும் தலமாதலால் இத்தலம் திருப்புள்ள பூதங்குடி ஆனது. 

வைணவ சம்பிராத யத்தில் வைணவர்களுக்கு இரண்டு பூதபுரிகள் உண்டு. 

ஒன்று காஞ்சிபுரம் அருகே ஸ்ரீபெரும்புதூர். ராமனுஜர் அவதரித்த இத்தலத்ததை 

ஆழ்வார்கள் சிறப்பித்தார்கள். மற்றொன்று தஞ்சாவூர் அருகே 

திருப்புள்ளபூதங்குடி. இதை ஆச்சாரியார்கள் சிறப்பித் தார்கள். ராமன் 

இத்தலத்தில் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சியளிப்பது விசேஷத்திலும் 

விசேஷம். திருமங்கையாழ்வார் இங்கு வந்த போது, இக்கோயிலில் வேறு 

ஏதோ தெய்வம் இருப்பதாக கருதி, கவனிக்காமல் சென்றார். அப்போது பெரிய 

ஒளி தோன்றி அதிலிருந்து சங்கு சக்ரதாரியாக ராமன் காட்சியளித்தார். 

இதைக்கண்ட திருமங்கை, அறிய வேண்டியதை, அறியாமல் சென்றேனே என 

10 பாசுரம் பாடினார். தந்தை தசரதருக்கு செய்ய வேண்டிய இறுதி காரியத்தை 

செய்ய முடியாவிட்டாலும், ஜடாயு விற்கு செய்ததை நினைத்து மகிழ்ந்ததால் 

இத்தல ராமன் வல்வில் ராமன் என அழைக்கப்படுகிறார்.

VILVANAN NATHAR




Tuesday 25 February 2014

சிவராத்திரி

சிவராத்திரி



சிவராத்திரியன்று நான்கு ஜாமங்களுக்கும் தனித் தனியான பூஜை முறைகள் சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளன. அதைக் கடைப்பிடித்தால் அனைத்துப் பலன்களையும் பெற முடியும். முக்கியமாக அன்று நாம் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். முதலாவது அபிஷேகம். இது ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவதற்குறியது.
 
அடுத்தது லிங்கத்துக்குக் குங்குமம் அணிவித்தல். இது நல்லியல்புகளையும் பலன்களையும் குறிக்கிறது. மூன்றாவது பல்வேறு வகையான உணவுகளைச் சிவபெருமானுக்கு நைவேத்யமாகப் படைக்கப்படுகிறது. இது வாழ்க்கையில் நீண்ட ஆயுளையும் நம் முடைய  விருப்பங்களையெல்லாம் நிறைவேற்று வதையும் குறிக்கும்.
 
நான்காவதாக செய்ய வேண் டியது தீபம் ஏற்றுதல், இல் வாழ்க்கைக்குத் தேவை யான அத்தனை செல்வங்களையும் நமக்குக் கொடுக்கும். எண்ணெய் விளக்கேற்றுவதால் நமக்கு அவசியமாகத் தேவைப்படுகிற ஞானத்தை அடைய முடியும்.
 
வெற்றிலை வழங்குவதால் உலக இன்பங்களையெல்லாம் அனுபவித்து முழுதிருப்தி அடைய முடியும். சிவராத்திரிக்கு முதல் நாள் ஒரே ஒரு நேரம் மட்டும் சாப்பிட வேண்டும். துவைத்த ஆடை உடுத்த வேண்டும். தூய்மையான மனதுடன் சிவனை வணங்க வேண்டும்.





சிவன் ராத்திரி



Saturday 22 February 2014

64 சிவ வடிவங்கள்( 27.கங்காள முர்த்தி)

27.கங்காள முர்த்தி


ஒரு முறை சிவாலயத்துள் எரிந்து கொண்டிருந்த விளக்கின் திரியைத் 

தூண்டிப்பிரகாசமாக எரிய உபகாரம் செய்தது ஒரு எலி.  எனவே அவ்வெலிக்கு 

திரிலோகமும் ஆட்சி செய்யும் அமைப்பை வழங்கினார் சிவபெருமான். 

 அவ்வெலி மாவிலி(மகாபலி) மன்னன் என்ற என்ற பெயருடன் அசுரகுலத்தின் 

அசுரவேக வளர்ச்சியைக் கண்ட தேவர்குலம் மாவிலி மன்னனுடன் 

போரிட்டனர். போரில் அசுர குலம் ஜெயிக்கவே தேவர்குலம் பயந்து 

திருமாலிடம் முறையிட்டனர். திருமாலை மகனாக அடைய வேண்டி காசிப 

முனிவரின் மனைவியான திதி என்பவள் வரம் கேட்க, அதன்படியே 

அவர்களுடைய மகனாக வாமன அவதாரம் ஆகப்பிறந்தார். மாவிலி அசுரனாக 

இருந்தாலும் தானதர்மங்களிலும், யாகங்கள் இயற்றுவதிலும் சிறந்தவனாக 

விளங்கினான். 
                  இந்நிலையில் வாமனன் மாவிலி அரண்மனைக்குச் சென்று மூன்றடி 

மண் கேட்டார். வந்திருப்பது திருமாலே எனவே தானம்தர ஒப்புக்கொள்ள 

வேண்டாமென அசுரகுருவான சுக்கிராச்சாரியார் தடுத்தார். இருப்பினும் 

கேளாமல் மூன்றடி மண் தானம் தர ஒப்புக் கொண்டார். உடனே திரிவிக்கிரம 

அவதாரம் எடுத்த திருமால் ஓரடியால் பூலோகத்தையும், மற்றொரு அடியால் 

தேவலோகத்தையும், மூன்றாவது அடிக்கு இடமில்லையே என்றுக் கூற 

மாவிலி தன் சிரம்மேல் மூன்றாவது அடியை அளக்குமாறுக் கூறினான். 

அதன்படி அவன் சிரம் மீது கால்வைத்து அழுத்த அவன் பாதாள லோகத்தில் 

அமிழ்ந்தான். மாவிலியை அழித்த திருமால் மிக்க கர்வம் கொண்டு 

மனிதர்களையும், தேவர்களையும் வம்பிற்கிழுத்தார். இதனால் பதற்றமடைந்த 

தேவர்குலம் கையிலை மலைக்கு சென்று நந்திதேவரின் அனுமதியுடன் 

சிவபெருமானை சந்தித்து விவரம் கூறினர். சிவபெருமான் வாமனரை சந்தித்து 

அமைதி கொள்ள வேண்டினார் ஆனால் கர்வமடங்காத திருமாலுக்கு 

பாடம்புகட்ட எண்ணினார். தன் திருக்கை வச்சிரதண்டம் எடுத்து வாமனன் 

மார்பில் அடித்தார் வாமனன் நிலம் வீழ்ந்தார். உடன் அவனது தோலை உறித்து 

மேல் ஆடையாக்கி,முதுகெலும்பினை பிடுங்கி தண்டாக கையில் தரித்துக் 
கொண்டு தேவர் துயர் துடைத்தார். கர்வம் ஒழிந்த திருமால் 

சிவபெருமானிடம் வாமன அவதாரத்தின் நோக்கம் பற்றிச் சொல்லி 

மன்னிப்புக் கேட்டு வைகுண்டம் சென்றார். பின்னர் மாவிலி மன்னனும் 

மோட்சமடைந்தார். சிவபெருமான் வாமனரின் முதுகெலும்பை கையில் 

தண்டாக மாற்றிக் கொண்ட கோலமே கங்காள மூர்த்தி 

என்றழைக்கப்படுகிறது (கங்காளம் - எலும்பு).

சீர்காழியில் கோயில் கொண்டுள்ள சட்டைநாதர், பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றார். இறைவி பெயர் பெரியநாயகி திருநிலைநாயகியாகும். இங்குள்ள சுகாசனமூர்த்தியை வணங்கி அர்ச்சித்தால் வியாழன் தொடர்புடைய தோஷங்களும் தீரும். தொழில் வளர்ச்சி பெருகும். நல்ல நிர்வாகத்திறமை வெளிப்படும். இவருக்கு நந்தியவர்த்த அர்ச்சனையும், சித்திரான்ன நைவேத்தியமும் பௌர்ணமி சோம வாரங்களில் கொடுக்க கேது தோஷம் தீரும். குழந்தை பாக்கியம் உண்டாகும். மேலும் இங்குள்ள மூர்த்திக்கு தர்பை நீரால் அபிசேகம் செய்தால் யோக சித்தி கிடைக்கும்.




Friday 21 February 2014

பைரவ வழிபாடு தேய்பிறை அஷ்டமி( 22.2.14 சனிக்கிழமை)

பைரவ வழிபாடு தேய்பிறை அஷ்டமி( 22.2.14 சனிக்கிழமை) 




சிவன் கோவில்களில், பைரவருக்கு என்று தனிச் சன்னதி உண்டு. ஈரோடு அருகே உள்ள சென்னிமலை பகுதியில் பைரவருக்கு தனியாக கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருப்பதாக சான்றுகள் தெரிவிக்கின்றன. 

 பைரவருக்கு பஞ்சதீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு தருவதாக கூறப்படுகிறது. பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமி தினத்தில், பைரவருக்கு பஞ்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்தால், தீராத தொல்லைகள் எதுவாக இருந்தாலும் தீர்ந்து வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் எள்ளளவும் ஐயம்   இல்லை. 

 நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய், பசு நெய் ஆகியவற்றை தனித்தனி அகல் விளக்கில் ஊற்றி, தீபம் ஏற்ற வேண்டும். ஒரு தீபத்தில் இருந்து மற்றொரு தீபத்தை ஏற்றாமல் ஒவ்வொரு தீபத்தையும் தனித்தனியாக ஏற்றி வழிபாடு செய்து வந்தால் எண்ணிய காரியங்கள் எளிதில் நிறைவேறுவதுடன், பைரவரின் பரிபூரணஅருளும் கிட்டும்.  








Monday 17 February 2014

64 சிவ வடிவங்கள்( 26. பாசுபத மூர்த்தி)

26. பாசுபத மூர்த்தி




பாரதப் போர் நடைபெற்ற சமயம் அபிமன்யூவை சயந்திரன் எனும் மன்னன் 

கொன்றான். இதனால் கோபம் கொண்ட அர்ச்சுனன் என் மகனைக் 

கொன்றவனை நாளை மாலைக்குள் வீழ்த்துவேன் அல்லவெனில் உயிர் 

மாய்ப்பேன் என சபதம் செய்தான். அப்போது மைத்துனனும், தேரோட்டியும், 

தோழனுமான கண்ணன் அவனைத் தனியாக அழைத்துச் சென்று 

தேற்றினான். பின் அர்ச்சுனன் பசியாற கனிகளைப் பறித்து கொடுத்தான். 

அவனும் நான் தினமும் சிவபெருமானை பூஜிக்காமல் உண்ணமாட்டேன் 

என்றான். கண்ணன் இன்று என்னையே சிவனாக எண்ணி பூஜிப்பாயாக 

என்றான். அர்ச்சுனன்னும் அவ்வாறே பூஜித்து பசியாறினான். பின் சிறிது கண் 

அயர்ந்தான். அவனது கனவில் கண்ணன் வந்தான், வந்து மைத்துனா ! சிந்து 

மன்னனை அழிக்க நாம் கையிலை சென்று சிவனை வணங்கி சூரிய 

உதயத்திற்கு முன் வந்து விட வேண்டும் என்றான். இருவரும் கையிலை 

சென்றனர். சிவபெருமான் பார்வதியை வணங்கி தாங்கள் வந்த விவரத்தைக் 

கூறினர். சிவபெருமான் அருகே அர்ச்சுனன் அர்ச்சித்த மலர்கள் இருந்தன. 

இதனைக் கண்ட அர்ச்சுனன் மகிழ்ந்தான். பின்னர் சிவபெருமான் 

தடாகத்திலிருந்து எதிரியை அழிக்க வல்ல பாசுபதத்தை கொடுத்து (முஷ்டி 

நிலை என்பது நினைவாலும் மறவாத தன்மை) இருவரும் சிவபெருமானுக்கு 

நன்றி கூறி வணங்கினர்.

சிவபெருமானும் பாரதப் போரில் வெற்றி உண்டாக வாழ்த்தினார். உடன் 

இருவரும் சிவபெருமானை வலம் வந்து தங்கள் நினைவுலகம் வந்து 

சேர்ந்தனர். அர்ச்சுனன் இவ்வாறு கனவு கண்டு உடன் கண் விழித்துப் 

பார்க்கையில் தன்னுடைய அம்பறாத்தாணியில் புது வகையான அம்பு 

அதாவது பாசுபதம் இருப்பதைக் கண்ட அர்ச்சுனன் மீண்டுமொரு முறை 

சிவபெருமானையும், கண்ணனையும் வணங்கினான். அர்ச்சுனனும் அன்றே 

சிவபெருமான் கொடுத்த பாசுபதத்தினால் சயந்திரனைக் கொன்று சபதத்தை 

நிறைவேற்றினான். கண்ணனும், அர்ச்சுனனும் வேண்டிய வண்ணம் 

பாசுபதத்தை அருளிய நிலையிலுள்ள மூர்த்தமே பாசுபத மூர்த்தி யாகும். 




குடவாசல் அருகே உள்ளது கொள்ளம்புதூர். இங்குள்ள இறைவன் பெயர் 

வில்வவனநாதர், இறைவி பெயர் சௌந்தர நாயகி என்பதாகும். இத்தல 

இறைவனை நாள்தோறும் வணங்கினால் பிறவிப் பெருங்கடல் நிந்தி 

இறைவனை அடையலாம்.சிவப்பு நிற மலர் அர்ச்சனையும், மஞ்சளன்ன 

நைவேத்தியமும், வியாழன், செவ்வாய் கிழமைகளில் கொடுக்க எதிரி 

நீங்குவர், கடன் தொல்லைத் தீரும். மேலும் இங்குள்ள இறைவனை 

கும்பநீரால் அபிஷேகம் செய்ய பிறவிப் பயன் எய்துவர்.