Sunday 8 June 2014

64 சிவ வடிவங்கள் (32.தட்சிணாமூர்த்தி)

64 சிவ வடிவங்கள் (32.தட்சிணாமூர்த்தி)





சிவபெருமானுடன் கையிலையில் உரையாடிக் கொண்டிருந்தார் பார்வதி 

தேவியார். அப்பொழுது சிவபெருமானிடம் ஐயனே தட்சனின் மகளானதால் 

தாட்சாயினி எனும் பெயர் எனக்கு ஏற்பட்டது. தங்களை அவமதித்த தட்சனின் 

இப்பெயரை வைத்திருப்பது எனக்குப் பிடிக்கவில்லை எனவே அப்பெயர் மாறும் 

வண்ணம் வரம் வேண்டுமெனக் கேட்க உடன் சிவபெருமானும் பார்வதி மலை 

மன்னன் குழந்தை வரம் வேண்டி தவமிருக்கிறான், அவனுக்கு நீ மகளாகச் 

செல். 
      பின் நான் வந்து மணமுடிப்பேன் என்றுக் கூறி அனுப்பினார். அங்கே 

குழந்தை உருவில் வந்த பார்வதி தேவி வளரத் துவங்கினார். இதற்கிடையே 

நான்முகனின் நான்கு புதல்வர்களான சனகன், சனந்தனன், சனாதனன், 

சனத்குமாரன் என்ற நான்கு முனிவர்கள் வேதாகமத்தை ஆரம்பம் முதல் 

முடிவு வரை படித்திருந்தனர். இருப்பினும் அவர்களது மனம் அலைபாய்ந்துக் 

கொண்டிருந்தது.

         இதனை சிவபெருமானிடம் கூறி தங்களுக்கு வேதத்தின் உட்பொருளை 

உபதேசிக்குமாறு வேண்டினார். உடன் சம்மதித்த சிவபெருமான் 

நந்திதேவரிடம் சென்று மன்மதனைத் தவிர வேறு யார் வந்தாலும் உள்ளே விட 

வேண்டாம் என்றுக் கட்டளையிட்டு வந்து சனகாதியர்க்கு பதி, பசு, பாசம் 

இவற்றையெல்லாம் விளக்கி விரிவாகக் கூறினார். உடன் அவர்கள் மேலும் 

மனம் ஒடுங்கும்படி ஞான உபதேசம் செய்யச் சொன்னார்கள். உடனே 

சிவபெருமான் இதைக் கேட்டவுடன் மெல்லிய புன்னகைப் புரிந்து "அப்பொருள் 

இவ்வாறிருக்கும் என்றுக் கூறினார். பின்னர் மேலும் புரியவைக்க தன்னையே 

ஒரு  முனிவன் போலாக்கி தியானத்தில் ஒரு கணநேரம் இருந்தார். அதே 

நிலையிலேயே அந்த நால்வரும் இருந்தனர். அப்போது மன்மதன் உள்ளே வந்து 

சிவபெருமான் மேல் பாணம் விட, கோபமுற்ற சிவபெருமான் அவனை 

நெற்றிக் கண்ணாலே எரித்தார். 

     சிவபெருமான் அந்நிலை நீங்கி முனிவர்களை வாழ்த்தி அனுப்பினார். 

இறைவன் தட்சிணாமூர்த்தியாக இருந்து சனகாதி முனிவர்களுக்கு 

உபதேசித்தால் அவரது பெயர் "தட்சிணாமூர்த்தி ஆயிற்று. 

 இவரை தரிசிக்க செல்லவேண்டிய தலம் "ஆலங்குடி யாகும், குடந்தை-

நீடாமங்கலம் வழியாக இவ்வூர் உள்ளது. இறைவன் காசியாரணியர். இறைவி 

<உமையம்மையாவார். இங்கு நடைபெறும் குருபெயர்ச்சி விசேசமாகும். சித்ரா 

பௌர்ணமி, தைப்பூசம், பங்குனி <உத்திரம் போன்ற நாட்களில் இருபத்தி நான்கு 

நெய் விளக்கு ஏற்ற திருமணத்தடை நீங்கும், குழந்தை பேறு கிடைக்கும். 

வெண்தாமரை அர்ச்சனையுமும் தயிரன்ன நைவேத்தியமும் 

வியாழக்கிழமைகளில் கொடுக்க நினைவாற்றல் பெருகும்.

இந்த தட்சிணாமூர்த்தி முன் நீர் ஆரத்தி எடுத்து தீபம் ஏற்ற தடைபெற்ற 

திருமணம் நடைபெறும், புத்திரப் பேறு கிடைக்கும்




Wednesday 4 June 2014

பாம்பன் சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம்

பாம்பன் சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம்






ஓம் ஷண்முக பதயே நமோநமஹ

ஓம் ஷண்மத பதயே நமோநமஹ

ஓம் ஷட்கிரீவ பதயே நமோநமஹ

ஓம் ஷட்கிரீட பதயே நமோநமஹ

ஓம் ஷட்கோண பதயே நமோநமஹ

ஓம் ஷட்கோச பதயே நமோநமஹ

ஓம் நவநிதி பதயே நமோநமஹ

ஓம் சுபநிதி பதயே நமோநமஹ

ஓம் நரபதி பதயே நமோநமஹ

ஓம் ஸூரபதி பதயே நமோநமஹ

ஓம் நடச்சிவ பதயே நமோநமஹ

ஓம் ஷடக்ஷர பதயே நமோநமஹ

ஓம் கவிராஜ பதயே நமோநமஹ

ஓம் தபராஜ பதயே நமோநமஹ

ஓம் இஹபர பதயே நமோநமஹ

ஓம் புகழ்முநி பதயே நமோநமஹ

ஓம் ஜயஜய பதயே நமோநமஹ

ஓம் நயநய பதயே நமோநமஹ

ஓம் மஞ்சுள பதயே நமோநமஹ

ஓம் குஞ்சரீ பதயே நமோநமஹ

ஓம் வல்லீ பதயே நமோநமஹ

ஓம் மல்ல பதயே நமோநமஹ

ஓம் அஸ்த்ர பதயே நமோநமஹ

ஓம் சஸ்த்ர பதயே நமோநமஹ

ஓம் ஷஷ்டி பதயே நமோநமஹ

ஓம் இஷ்டி பதயே நமோநமஹ

ஓம் அபேத பதயே நமோநமஹ

ஓம் ஸூபோத பதயே நமோநமஹ

ஓம் வ்வியூஹ பதயே நமோநமஹ

ஓம் மயூர பதயே நமோநமஹ

ஓம் பூத பதயே நமோநமஹ

ஓம் வேத பதயே நமோநமஹ

ஓம் புராண பதயே நமோநமஹ

ஓம் பிராண பதயே நமோநமஹ

ஓம் பக்த பதயே நமோநமஹ

ஓம் முக்த பதயே நமோநமஹ

ஓம் அகார பதயே நமோநமஹ

ஓம் உகார பதயே நமோநமஹ

ஓம் மகார பதயே நமோநமஹ

ஓம் விகாச பதயே நமோநமஹ

ஓம் ஆதி பதயே நமோநமஹ

ஓம் பூதி பதயே நமோநமஹ

ஓம் அமார பதயே நமோநமஹ

ஓம் குமார பதயே நமோநமஹ




64 சிவ வடிவங்கள்(31. சண்டேச அனுக்கிரக மூர்த்தி)

31. சண்டேச அனுக்கிரக மூர்த்தி





திருசேய்ஞலூரில் வாழ்ந்து வந்தான் யஜ்ஞதத்தன். அவன் மனைவி பத்திரை. 

இவர்களது மகனாக விசாரசருமர் என்பவன் இருந்தான். விசாரசருமர் 

பிறக்கும்போதே முன்ஜென்ம அறிவின் பயனாக நல்லறிவுடன் பிறந்தான். 

யாரிடமும் வேதம் பயிலாமல் தானே உணரும் அறிவைப் பெற்றிருந்தான். 

ஏழுவயதில் அவருக்கு <உபநயனம் செய்தனர். எந்த ஆசிரியரிடமும் கற்காமல் 

தானே அனைத்தையும் <உணர்ந்து வேதாகம சொற்படி வாழ்ந்து வந்தான்.

 அவனுக்கு ஐந்தொழில்கள் செய்து எம்மை வழிநடத்த உரியவர் சிவபெருமான் 

ஒருவரே என தீர்மானமாக நம்பியிருந்தான். அவ்வாறிருக்கையில் அவனுடன் 

இருக்கும் ஒரு அந்தணச் சிறுவன் பசுவை அடிப்பதைக்கண்டான் விசாரசருமர். 

உடன் பசு மேய்க்கும் வேலையை அவனே செய்யலானான். கோமாதாவின் 

அருமை பெருமைகளை <உணர்ந்ததால் அத்தொழிலைச் சிறப்பாகச் செய்தான். 

சரியான முறையில் அவற்றை அன்புடன் பராமரித்தான். 
           
 அதனால் அவை முன்பை விட அதிகளவில் பால் கொடுத்தது. இதற்கிடையே 

அங்குள்ள மண்ணி ஆற்றங்கரையின் மணல்மேட்டில் உள்ள அத்திமரத்தின் 

கீழே மணலிங்கம் செய்து கோயில், கோபுரம், மதில் போன்றவற்றை 

மணலாலே அமைத்து சிவபெருமானுக்கு பூஜைசெய்து பாலபிசேகம் செய்து 

வழிபட்டு வந்தார். இதனையே தினசரி வாடிக்கையாக்கினார். இதனைக் 

கண்டோர் ஊர் பெரியோரிடம் முறையிட ஊர் பெரியோர் விசாரசருமனின் 

தந்தையிடம் முறையிட்டனர்

விசாரசருமரின் தந்தை இனி தான் பார்த்துக் கொள்வதாகக் கூறினார், மறுநாள் 

அதிகாலை விசாரசருமர் ஆற்றங்கரைக்கு சென்று பூஜித்து பாலபிசேகம் 

செய்துக் கொண்டிருக்கும் போது அவரது தந்தையார் கண்டு விசாரசருமரின் 

முதுகில் ஓங்கி அடிவைத்தார். அடியின் வலி உணராமல் சிவபூஜையிலேயே 

விசாரசருமர் ஈடுபட்டிருந்தார் அதிக கோபமுற்ற தந்தையார் பால் குடங்களை 

<உதைத்துத் தள்ளினார். 

இதன்பின்னே சுயநினைவு வரப்பெற்ற விசாரசருமர் தந்தையென்னும் பாராமல் 

அங்கிருந்த ஒரு கொம்பை எடுத்தார். அது மழுவாக மாறியது. உடன் 

தந்தையாரின் காலை வெட்டினார். <உடனே தம்பதி சமேதராய் சிவபெருமான் 

அங்கு காட்சிக்கொடுத்தார். பின் என்னுடைய தொண்டர்கள் அனைவருக்கும் 

உன்னைத் தலைவாக்கினோம் மேலும் என்னுடைய அமுதம், மலர்கள், 

பரிவட்டம் என அனைத்தும் உனக்கே தந்தோம் என்றபடியே தனது 

சடாமுடியில் இருந்த கொன்றை மாலையை விசாரசருமருக்கு சூட்டி அவருக்கு 

சண்டேச பதவியை அளித்தார். 

 விசாரசருமருக்கு சண்டேச பதவியை அனுகிரகித்ததால் சிவபெருமானுக்கு "சண்டேச அனுக்கிரக மூர்த்தி என்றப் பெயர் ஏற்பட்டது.

கும்பகோணம் சேய்ஞலூர் ரோட்டைத் தாண்டி அமைந்துள்ள ஊர் 

"திருவாய்ப்பாடி ஆகும். இவரது பெயர் பாலுகந்தமூர்த்தி, இறைவி பெயர் 

பெரியநாயகி என்பதாகும். சண்டேசப் பதவியை அளிக்கும் வல்லமை இவர் 

ஒருவருக்கே உண்டு. சண்டேஸ்வரனை வணங்கினால்தான் சிவ வழிபாடே 

முழுமையடையும். இவரை வணங்க மனம் ஒருமைப்படும். 

வில்வார்ச்சனையும் வெண்சாத நைவேத்தியமும் பிரதோஷம், 

சோமவாரங்களில் கொடுக்க நல்லறிவு, நல்லெண்ணம் வெளிவரும். மேலும் 

இம்மூர்த்தியை பஞ்சகவ்யம் கொண்டு வழிபட ஆன்மாவானது 

தூய்மையடையும்.

Monday 2 June 2014

வாராகி மாலை

வாராகி மாலை



1. வசீகரணம் (தியானம்)





இருகுழை கோமளம் தாள் புஷ்பராகம் இரண்டுகண்ணும்
குரு மணி நீலம் கை கோமேதகம் நகம் கூர்வயிரம்
திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்தவல்லி
மரகத நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே.

2. காட்சி (யந்த்ர ஆவாஹனம்)






தோராத வட்டம் முக்கோணம் ஷட்கோணம் துலங்கு வட்டத்து
ஈராறிதழ்இட்டு ரீங்காரம் உள்ளிட் டதுநடுவே
ஆராதனைசெய்து அருச்சித்துப் பூஜித்தடிபணிந்தால்
வாராதிராள் அல்ல வோலை ஞான வாராஹியுமே.

3. பகை தடுப்பு (பிரதாபம்)



மெய்ச்சிறத்தாற்பணியார் மனம் காயம் மிகவெகுண்டு
கைச்சிரத் தேந்திப் புலால்நிணம் நாறக் கடித்துதறி
வச்சிரத் தந்த முகப்பணியாற் குத்தி வாய்கடித்துப்
பச்சிரத்தம்குடிப்பாளே வாராஹி பகைஞரையே.

4. மயக்கு (தண்டினி தியானம்)










படிக்கும் பெரும்புகழ்ப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
அடிக்கும் இரும்புத் தடிகொண்டு பேய்கள் அவர்குருதி
குடிக்கும் குடர்கொண்டு தோள்மாலை இட்டுக் குலாவிமன்றில்
நடிக்கும் வாராஹி பதினா லுலகம் நடுங்கிடவே.

5. வெற்றி ஈர்ப்பு (சத்ரு ஸம்ஹாரம்)


நடுங்கா வகைஅன்பர் நெஞ்சினிற் புக்கவர் நண்ணலரைக்
கொடும்காளி உண்ணக் கொடுக்கும் குருதிகள் கொப்பளித் திட்
டிடும்பாரக் கொங்கையின் மீதே இரத்தத் திலகம்இடும்
தொடும்கார் மனோன்மணி வாராஹிநீலி தொழில் இதுவே.

6. உச்சாடணம் (ரோகஹரம்)


வேய்க்குலம் அன்னதிண்தோளாள் வாராஹிதன் மெய்யன்பரை
நோய்க்குலம் என்ன இடும்பு செய்வார்தலை நொய்தழித்துப்
பேய்க்குலம் உண்ணப் பலிகொண்டு போட்டுப் பிணக்குடரை
நாய்க்குலம் கௌவக் கொடுப்பாள் வாராஹிஎன் நாரணியே.

7. எதிர்ப்புக் கட்டு (சத்ருஹரம்)


நாசப் படுவர் நடுங்கப்படுவர் நமன்கயிற்றால்
வீசப் படுவர் வினையும் படுவர்இம் மேதினியோர்
ஏசப் படுவர் இழுக்கும் படுவர்என் ஏழைநெஞ்சே
வாசப் புதுமலர்த் தேனாள் வாராஹியை வாழ்த்திலரே.

8. பெரு வச்யம் (திரிகாலஞானம்)


வாலை புவனை திரிபுரை மூன்றும்இவ் வையகத்திற்
காலையும் மாலையும் உச்சியும் ஆகஎக் காலத்துமே
ஆலயம் எய்தி வாராஹிதன் பாதத்தை அன்பில் உன்னி
மாலயன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே.

9. பகை முடிப்பு (வித்வேஷணம்)


வருத்திப் பகைத்தீர் என்னோடறியாமல்முன் வானவர்க்காச்
சிரித்துப் புரம்எரித்தோன் வாம பாகத்துத் தேவி எங்கள்
கருத்திற் பயிலும் வாராஹிஎன் பஞ்சமி கண்சிவந்தாற்
பருத்திப் பொதிக்கிட்ட தீப்பொறி காணும் பகைத்தவர்க்கே.

10. வாக்கு வெற்றி (சத்ரு மாரணம்)


பாப்பட்ட செந்தமிழ்ப் பாவாணர் நின்மலர்ப் பாதம் தன்னிற்
பூப்பட்டதுவும் பொறிபட்டதோ? நின்னை யேபுகழ்ந்து
கூப்பிட்ட துன்செவி கேட்கிலையோ? அண்ட கோளமட்டும்
தீப்பட்ட தோ? பட்டதோ நிந்தை யாளர்தெரு எங்குமே.

11. தேவி வருகை (பூதபந்தனம்)


எங்கும் எரியக் கிரிகள் பொடிபட எம்பகைஞர்
அங்கம் பிளந்திட விண்மண் கிழிந்திட ஆர்த்தெழுந்து
பொங்கும் கடல்கள் சுவறிடச் சூலத்தைப் போகவிட்டுச்
சிங்கத்தின் மீது வருவாள் வாராஹி சிவசக்தியே.

12. ஆத்மபூஜை (மஹாமாரி பஜனம்)


சக்தி கவுரி மஹமாயி ஆயிஎன் சத்துருவைக்
குத்தி இரணக் குடரைப் பிடுங்கிக் குலாவிநின்றே
இத்திசை எங்கும் நடுங்கக் கிரிகள் இடிபடவே
நித்தம் நடித்து வருவாள் வாராஹிஎன் நெஞ்சகத்தே

13. தேவிதாபனம் (பில்லி மாரணம்)


நெஞ்சகம் தன்னில் நிறைந்திருக் கின்றவன் நிர்க்குணத்தி
நஞ்சணி கண்டத்தி நாரா யணிதனை நம்புதற்கு
வஞ்சனை பண்ணி மதியாத பேரைவாழ் நாளை உண்ணக்
கொஞ்சி நடந்து வருவாள் வாராஹி குலதெய்வமே.

14. மந்திரபூஜை (முனிமாரணம்)


மதுமாமிஸம்தனைத் தின்பாள் இவள்என்று மாமறையோர்
அதுவே உதாஸினம் செய்திடுவார் அந்த அற்பர்கள்தம்
கதிர்வாய் அடைத்திட உள்ளம் கலங்கக் கடித்தடித்து
விதிர் வாளில் வெட்டி எறிவாள் வாராஹிஎன் மெய்த் தெய்வமே.

15. வாராஹி அமர்தல் (மூர்த்தி தியானம்)



ஐயும் கிலியும் எனத்தொண்டர் போற்ற அரியபச்சை
மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியு(ம்) மலர்க்
கையும் பிரம்பும் கபாலமும் சூலமும் கண்எதிரே
வையம் துதிக்க வருவாள் வாராஹி மலர்க்கொடியே

16. வரம் பொழிதல் (எதிரி மாரணம்)


தாளும் மனமும் தலையும் குலையத் தரியலர்கள்
மாளும் படிக்கு வரம்தருவாய்: உன்னை வாழ்த்தும் அன்பர்
கோளும் பகையும் குறியார்கள் வெற்றி குறித்த சங்கும்
வாளும் கடகமும் சூலமும் ஏந்தி வரும் துணையே!

17. வாழ்த்துதல் (உலக மாரணம்)


வருந்துணை என்று வாராஹிஎன்றன்னையை வாழ்த்திநிதம்
பொருந்தும் தகைமையைப் பூணா தவர் புலால்உடலைப்
பருந்தும் கழுகும்வெம் பூதமும் வெய்ய பிசாசுகளும்
விருந்துண்ணப் பட்டுக் கிடப்பர்கண்டீர் உடல் வேறுபட்டே.

18. நன்னீர் வழங்கல் (ஏவல் பந்தனம்)


வேறாக்கும் நெஞ்சும் வினையும்வெவ்வேறு வெகுண்டுடலம்
கூறாக்கும் நெஞ்சத்திற் செந்நிறம் ஆன குருதிபொங்கச்
சேறாக்கும் குங்குமக் கொங்கையிற் பூசும் திலகம் இடும்
மாறாக்கும் நேமிப் படையாள் தலைவணங்காதவர்க்கே.

19. புனித நீர் அருந்துதல் (துஷ்ட பந்தனம்)


பாடகச் சீறடிப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
ஓடவிட் டேகை உலக்கைகொண் டெற்றி உதிரம் எல்லாம்
கோடகத் திட்டு வடித்தெடுத் தூற்றிக் குடிக்கும் எங்கள்
ஆடகக் கும்ப இணைக்கொங்கையாள்எங்கள் அம்பிகையே.

20. மலர் வழிபாடு (கர்ம வாஸன நாசனம்)



தாமக் குழலும் குழையும் பொன் ஓலையும் தாமரைப்பூஞ்
சேமக் கழலும் துதிக்கவந் தோர்க்கு ஜெகம்அதனில்
வாமக் கரள களத்தம்மை ஆதி வாராஹிவந்து
தீமைப் பவத்தைக் கெடுத்தாண்டு கொள்வாள் சிவசக்தியே.

21. தேவி சன்னிதானம் (கர்ம மூலபந்தனம்)


ஆராகிலும் நமக்கேவினை செய்யின் அவர்<<உடலும்
கூராகும் வாளுக் கிரைஇடுவாள்கொன்றை வேணிஅரன்
சீரார் மகுடத் தடிஇணை சேர்க்கும் திரிபுரையாள்
வாராஹி வந்து குடிஇருந்தாள்என்னை வாழ்விக்கவே.

22. தேவி துதி மாலை (ஜன்ம துக்க நாசனம்)


தரிப்பாள் கலப்பை என்அம்மை வாராஹிஎன் சத்துருவைப்
பொரிப்பாள் பொறிஎழச் செந்தீயில் இட்டு பொரிந் ததலை
நெரிப்பாள் தலைமண்டை மூளையைத் தின்றுபின் நெட்டுடலை
உரிப்பாள் படுக்க விரிப்பாள்சுக்காக உலர்த்துவளே

23. புகழ்சொற்பாமாலை (மௌனானந்த யோகம்)


ஊரா கிலும்உடன் நாடா கிலும்அவர்க் குற்றவரோடு
யாரா கிலும்நமக் காற்றுவரோ? அடல்ஆழி உண்டு
காரார் கருத்த உலக்கையும் உண்டு கலப்பை உண்டு
வாராஹி என்னும்மெய்ச் சண்டப் ப்ரசண்ட வடிவிஉ<ண்டே.

24. படைக்கள வாழ்த்து (பதஞான யோகம்)


உலக்கை கலப்பை ஒளிவிடு வாள்கட காழிசங்கம்
வலக்கை இடக்கையில் வைத்த வாராஹிஎன் மாற்றலர்கள்
இலக்கம் இல்லாத எழிற்பெரும் சேனை எதிர்வரினும்
விலக்கவல்லாள் ஒரு மெல்லிதன் பாதம் விரும்புகவே.

25. பதமலர் வாழ்த்து (பிரதிபந்த நாசன யோகம்)


தஞ்சம் உன் பாதம் சரணா கதிஎன்று சார்ந்தவர்மேல்
வஞ்சனை பில்லி கொடிதேவல் சூனியம் வைத்தவரை
நெஞ்சம் பிளந்து நிணக்குடல் வாங்கி நெருப்பினிலிட்(டு)
அஞ்சக் கரங்கொண் டறுப்பாள் திரிபுரை ஆனந்தியே.

26. படைநேமி வாழ்த்து (சிந்தனானந்த யோகம்)


அலைபட்டு நெஞ்சம் அலைந்துயிர் சோர அலகைக் கையால்
கொலைபட் டுடலம் கழுகுகள் சூழக் குருதி பொங்கித்
தலைகெட்டவயவம் வேறாய்ப் பதைப்புற்றுச் சாவர்கண்டீர்
நிலைபெற்ற நேமிப் படையாள் தனைநினை யாதவரே.

27. அடியார் வாழ்த்து (அர்ச்சனானந்த யோகம்)


சிந்தை தெளிந்துனை வாழ்த்திப் பணிந்து தினம்துதித்தே
அந்தி பகல்உன்னை அர்ச்சித்தபேரை அசிங்கியமாய்
நிந்தனை பண்ணி மதியாத உலுத்தர் நிணம் அருந்திப்
புந்தி மகிழ்ந்து வருவாய் வாராஹிநற் பொற்கொடியே.

28. திருப்படை வந்தனம் (அம்ருதானந்த யோகம்)


பொருப்புக்கு மாறுசெய் ஆழியும் தோடும் பொருப்பைவென்ற
மருப்புக்கு நேர்சொலும் கொங்கையும் மேனியும் வாழ்த்தும் என(து)
இருப்புக் கடிய மனதிற் குடிகொண்டு எதிர்த்தவரை
நெருப்புக் குவால்எனக் கொல்வாய் வாராஹிஎன் நிர்க்குணியே.

29. பதமலர் வந்தனம் (கைவல்யானந்த யோகம்)


தேறிட்ட நின்மலர்ப் பாதார விந்தத்தைச் சிந்தை செய்து
நீறிட் டவர்க்கு வினைவரு மோ? நின் அடியவர்பால்
மாறிட் டவர்தமை வாள்ஆயுதம் கொண்டு வாட்டிஇரு
கூறிட் டெறிய வருவாய் வாராஹி குலதெய்வமே.

30. சித்தி வந்தனம் (ஆனந்த யோகம்)


நரிபரி ஆக்கிய சம்புவின் பாகத்தை நண்ணியமான்
அரிஅயன் போற்றும் அபிராமி தன்அடி யார்க்கு முன்னே
ஸரியாக நின்று தருக்கம்செய் மூடர்தலையைவெட்டி
எரியாய் எரித்து விடுவாள் வாராஹி எனும்தெய்வமே.

31. நவகோண வந்தனம் (நித்யானந்த யோகம்)


வீற்றிருப்பாள்நவ கோணத்திலேநம்மை வேண்டும் என்று
காத்திருப்பாள்கலி வந்தணுகாமல்என் கண்கலக்கம்
பார்த்திருப்பாள் அல்லள் எங்கேஎன்றங்குச பாசம் கையில்
கோத்திருப்பாள் இவளேஎன்னை ஆளும் குலதெய்வமே.

32. நிறைமங்கலம் (சிவஞான யோகம்)


சிவஞான போதகி செங்கைக் கபாலி திகம்பரிநல்
தவம்ஆரும் மெய்யன்பர்க் கேஇடர் சூழும் தரியலரை
அவமானம் செய்யக் கணங்களை ஏவும்அகோரி இங்கு
நலமாக வந்தெனைக் காக்கும் திரிபுர நாயகியே