Sunday 29 September 2013

சுவர்ண ஆகர்ஷண பைரவர்

சுவர்ண ஆகர்ஷண பைரவர் 



இந்த ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம் தனச் செழிப்பைத் தருவது. வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை இரண்டு நாட்களிலும், சந்தியா காலங்களில் படிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியையும், தன விருத்தியையும் அடைவார்கள்.  

பவுர்ணமியன்று இரவு எட்டு மணிக்கு தீபத்தை ஏற்றி வைத்துக் கொண்டு பதினெட்டு தடவை பாராயணம் செய்ய வேண்டும். இவ்விதம் ஒன்பது பௌர்ணமி பாராயணம் செய்தால் கண்டிப்பாக தன லாபத்தை அடைவார்கள். நீண்ட நாட்களாக பிடித்துக் கொண்ட வறுமையிலிருந்து விடுபடுவார்கள். ஒன்பதாவது பவுர்ணமியன்று அவலில் பாயசம் செய்து நிவேதிக்கலாம். 

வசதிக்கும், வாய்ப்புக்கும் ஏற்ப நிவேதனப் பொருளைக் கூட்டிக் கொள்ளலாம். அளவற்ற கீர்த்தியையும் தனத்தையும் தரும் இந்த பவுர்ணமி பூஜையை விடாமல் செய்பவர்களுக்கு சந்தோஷம் நிரந்தரமாக இருக்கும். 

தனந்தரும் வயிரவன் தளிரடி பணிந்திடின் 
தளர்வுகள் தீர்ந்துவிடும் 
மனந் திறந்தவன் பதம் மலரிட்டு வாழ்த்திடின் 
மகிழ்வுகள் வந்து விடும்
 சினந்தவிர்த் தன்னையின் சின்மயப்புன்னகை 
சிந்தையில் ஏற்றவனே 
தனக்கிலை யீடு யாருமே என்பான் 
தனமழை பெய்திடுவான் 

வாழ்வினில் வளந்தர வையகம் நடந்தான் 
வாரியே வழங்கிடுவான் 
தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட 
தானென வந்திடுவான் 
காழ்ப்புகள் தீர்த்தான் கானகம் நின்றான் 
காவலாய் வந்திடுவான் 
தனக்கிலை யீடு யாருமே என்பான் 
தனமழை பெய்திடுவான் 

முழு நில வதனில் முறையொடு பூஜைகள் 
முடித்திட அருளிடுவான் 
உழுதவன் விதைப்பான் உடைமைகள் காப்பன் 
உயர்வுறச் செய்திடுவான் 
முழுமலர்த் தாமரை மாலையை ஜெபித்து 
முடியினில் சூடிடுவான் 
தனக்கிலை யீடு யாருமே என்பான் 
தனமழை பெய்திடுவான் 

நான்மறை ஒதுவார் நடுவினில் இருப்பான் 
நான்முகன் நானென்பான் 
தேனினில் பழத்தைச் சேர்த்தவன் ருசிப்பான் 
தேவைகள் நிறைத்திடுவான் 
வான்மழை எனவே வளங்களைப் பொழிவான் 
வாழ்த்திட வாழ்த்திடுவான் 
தனக்கிலை யீடு யாருமே என்பான் 
தனமழை பெய்திடுவான் 

பூதங்கள் யாவும் தனக்குள்ளே வைப்பான் 
பூரணன் நான் என்பான் 
நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை 
நாணினில் பூட்டிடுவான் 
காதங்கள் கடந்து கட்டிடும் மாயம் 
யாவையும் போக்கிடுவான் 
தனக்கிலை யீடு யாருமே 
என்பான் தனமழை பெய்திடுவான் 

பொழில்களில் மணப்பான் பூசைகள் ஏற்பான் 
பொன் குடம் ஏந்திடுவான் 
கழல்களில் தண்டை கைகளில் மணியணி 
கனகனாய் இருந்திடுவான் 
நிழல் தரும் கற்பகம் நினைத்திட பொழிந்திடும் 
நின்மலன் நானென்பான் 
தனக்கிலை யீடு யாருமே 
என்பான் தனமழை பெய்திடுவான் 

சதுர்முகன் ஆணவத் தலையினைக் கொய்தான் 
சத்தொடு சித்தானான் 
புதரினில் பாம்பைத் தலையினில் வைத்தான் 
புண்ணியம் செய்யென்றான் 
பதரினைக் குவித்து செம்பினை எரித்தான் 
பசும்பொன் இதுவென்றான் 
தனக்கிலை யீடு யாருமே என்பான் 
தனமழை பெய்திடுவான் 

ஜெய ஜெய வடுக நாதனே சரணம் 
வந்தருள் செய்திடுவாய் 
ஜெய ஜெய க்ஷத்திர பாலனே சரணம் 
ஜெயங்களைத் தந்திடுவாய் 
ஜெய ஜெய வயிரவா செகம் புகழ் தேவா 
செல்வங்கள் தந்திடுவாய் 
தனக்கிலை யீடு யாருமே என்பான் 
தனமழை பெய்திடுவான்



Friday 27 September 2013

64 சிவவடிவங்கள்(11. இடபாரூட மூர்த்தி)

11. இடபாரூட மூர்த்தி









திரிபுர அசுரர்களின் தொல்லை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டேயிருந்தது. இனி பொருக்க முடியாத தேவர்கள் கைலாயம் சென்று நந்தி தேவரின் அனுமதியிடன் சிவபெருமானை தரிசித்தனர். சிவனும்  போரிற்கு வேண்டிய ஆயுதங்களை தயார் நிலையில் வைக்கும் படி ஆணை இட்டார். ஆயுதங்கள் தயாரானதும்  சிவபெருமானும், உமாதேவியும்  தருமதேவதையாகிய வெண்ணிற இடப வாகனத்தில் கைலாய மலையை விட்டு இறங்கி வருகின்றனர்.  இதனைக் கண்ட அனைவரும் சிவதுதி சொல்லத் துவங்கினர். பின்னர் தேவர்களால் செய்யப்பட்ட தேரினைக்கண்ட சிவபெருமான்  இடபவாகனத்தை விட்டு இறங்கி மேருமலையை வில்லாகக் கொண்டு தேர் ஏறியவுடன் தேரின் அச்சு முறிந்தது. இதனைக் கண்ணுற்ற விஷ்ணு சிவன் பால் கொண்ட அன்பினால் இடப உருவமாகி சிவனைத் தாங்கினான். இதனால் விஷ்ணுவிற்கு  தலைகனம் ஏற்பட்டது. தன்னைத் தவிர வேறொருவருக்கும் சிவனைத் தாங்கும் சக்தி இல்லை என்ற எண்ணம் வலுப்பெற்றது.

இதனை அறிந்த சிவபெருமான்  விஷ்ணுவிற்கு பாடம் புகட்ட எண்ணி, தன்கனத்தை அதிகப்படுத்தினார். இதனைத் தாங்காத இடப வாகணமாகிய  விஷ்ணு, இரு செவி, இரு கண்கள், மூக்கு போன்றவை பிதுங்கியும், இரத்தம் வடிந்தும் செயலிழந்து தரையில் வீழ்ந்தார். இதனால் தேவர்கள் பயத்துடன் சிவதுதிகளை சொல்லி அவரை சாந்தப்படுத்தினர். விஷ்ணுவும் மனம்  வருந்தி மன்னிப்பு கேட்டார்.  விஷ்ணு தலைகனம் அழிந்தது. மனம் மகிழ்ந்த சிவபெருமான் பூமியில் இறங்கினார். பின்னர் விஷ்ணுவின் வலிமைகளை மறுபடியும் அழித்தார். விஷ்ணுவிடம் என்ன வரம் வேண்டுமென்றுக் கேட்க, விஷ்ணுவும் சிவபெருமான் வாமபாகத்திலிருந்து அவரைத் தாங்கும் சக்தியை தனக்கு கொடுக்க வேண்டும் என வேண்டினார். அதனை நிறைவேற்றிய சிவபெருமான் விஷ்ணுவின் விருப்பப்படி  அரியாகிய இடத்தை வாகனமாகக் கொண்டு அதன்மேல் ஏறியமர்ந்தார். எனவே சிவபெருமானுக்கு  இடபாரூட மூர்த்தி என்று திருநாமம் உண்டாகிற்று.

இடபாரூட மூர்த்தியை சரிசிக்க நாம் செல்ல வேண்டிய தலம் மயிலாடுதுறையருகேயுள்ள திருவாவடுதுறையாகும். இறைவனது திருநாமம்  கோமூத்திஸ்வரர், மாசிலாமணிஸ்வரர்  என்பதாகும். இங்குள்ள கோமூத்தி தீர்த்தத்தால் இடபாரூடரை அபிசேகம் செய்ய உடல் நோய் தீரும், குழந்தை பாக்கியம் உண்டாகும், திருமந்திர பொருள்  விளங்கும். அருகம்புல் அர்ச்சனையும், தாம்பூல நைவேத்தியமும் பிரதோஷ காலங்களில் கொடுக்க நினைத்தது நடைபெறும். உயர்பதவி கிட்டும். இங்குள்ள சிவனை வில்வ நீரால்  அபிசேகம் செய்ய அடுத்த பிறவியிலும் சிவனின்  அருள் பரிபூரணமாய் கிடைக்கும் என்பது ஐதீகம்.


Tuesday 24 September 2013

நீண்ட நாள் நோய் விலக பரிகாரம்

நீண்ட நாள் நோய் விலக பரிகாரம்

கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரங்கள் அவரவர் ராசிப்படி கொடுக்கப்பட்டுள்ளது . அவரவர் ராசிப்படி வணங்க வேண்டிய தெய்வங்களை வணங்கினால் பிரச்சனைகள் தீர்ந்து நன்னை அடையலாம். (பிறப்பு ராசிப்படி)


மேஷம்- ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி, சனி கிரகம் வழிபாடு, திருவண்ணாமலை கிரிவலம் நலம் தரும்

ரிஷபம் - நரசிம்மர் , தட்சிணா மூர்த்தி
மிதுனம் - திருமுருகன், துர்க்கை, விநாயகர்

கடகம் - பைரவர் வழிபாடு, லலிதா சகஸ்ர நாமம் பாராயணம்

சிம்மம் - மகான்களின் ஜீவசமாதி வழிபாடு, ஸ்ரீ ஆஞ்கநேயர் வழிபாடு, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்




கன்னி - பிரதோஷ வழிபாடு, லட்சுமி நரசிம்மர் பைரவர் வழிபாடு



துலாம் - ஸ்ரீ சரபர், துர்க்கை, பிரத்யங்கிரா (பத்ரகாளி)

விருச்சிகம் - திருச்செந்தூர் முருகன்,ஸ்ரீ சக்கரத்தாழ்வார் மகான்கள் சமாதி வழிபாடு


தனுசு - ஸ்ரீ பழனி முருகன், ஸ்ரீ லட்சுமி வழிபாடு




மகரம் - ஸ்ரீ ஆஞ்சநேயர், திருத்தணி முருகன்  



கும்பம் - நின்ற கோல பெருமாள் வழிபாடு சித்தர்கள், மகான்களின் ஜீவசமாதி வழிபாடு



மீனம் - இராமேஸ்வரம், திருப்புல்லாணி சேது சமுத்ர ஸ்நானம் வழிபாடு, பைரவருக்கு தேன் அபிஷேகம் செய்து வரலாம்,














64 சிவவடிவங்கள்(10. சந்திரசேகர மூர்த்தி)

10. சந்திரசேகர மூர்த்தி



நான் முகனின் மகன் தட்சன். அவனுக்கு நட்சத்திரங்களே  இருபத்தியேழுப் பெண்களாகப் பிறந்தது. அவர்கள் அனைவரையும் சந்திரனுக்கு  திருமணம் செய்வித்தார்.  சந்திரன் திருமணம் நடைப்பெற்ற சிறிது காலம் வரை அனைத்து மனைவியரிடத்தும் அன்போடு இருந்தார். நாட்கள் செல்ல அவரது அன்பு கார்த்திகை, ரோகிணி இடத்தில் மட்டும் மிகுந்தது. இதனால் மற்றப் பெண்கள் மனம் சகியாது தந்தையாகிய தட்சனிடத்தில் கூறினர். தட்சனும் மருமகனை அழைத்து தம் அனைத்து மகள்களையும் சமமாக நடத்தும் படி, அவர்களுடன் அன்புடன் இருக்கும் படியும் புத்திமதிகள் கூறி அனுப்பி  வைத்தார்.  சிறிது காலத்திற்குப் பின் சந்திரனின் நடவடிக்கையில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாமல் இருந்தது.

எனவே மறுபடியும் பெண்கள் தன் தந்தை தட்சனிடம் முறையிட்டனர். பெண்களின் துன்பம் சகியாது தட்சன் நாளுக்கொரு கலையாக குறைந்து இறப்பாய் என்று சந்திரனுக்கு சாபம் கொடுத்தார். 

சாபத்தின் வீரியத்தால் நாளொரு கலையாக சந்திரன் தேய்ந்து கொண்டே வந்து இறுதியாக ஒரு கலை மட்டுமே இருக்கும் நிலையில் இந்திரனின் ஆலோசனைப்படி நான்முகனை சந்தித்து தன் குறைகளைச் சொன்னான். நான்முகனோ தன் வேலையில் மகனும்  மகன் வேலையில் தானும் தலையிடுவதில்லை  என்று உறுதிகொண்டுள்ளோம். எனவே  இக் குறைகளை சிவபெருமானால் மட்டுமே தீர்க்க முடியும் எனவே  அவரை  சரணடையிமாறு சொன்னார்.   அதன்படி சந்திரன் சிவபெருமானிடம்  சரணடைய  சிவனும் சந்திரனின்  ஒரு கலையை  எடுத்து தன் சடையில்  வைத்து இனி உன் ஒருக்கலைக்கு  அழிவில்லை  ஆனாலும்  தட்சனின் சாபத்தால்  தினமொரு  கலையாக  அழிந்தும்,  என்னிடம்  உள்ளதால்  தினமொரு கலையாக  வளர்ந்தும்  காணப்படுவாய்  என  அருளாசி கூறினார்.  சந்திரனைத் தன் சடையில் தரித்ததால்          சந்திர   சேகரன் ஆனார்.  அவரது தலம்  திருவாரூர்(புகலூர்) நாகபட்டிணம் அருகே உள்ளது.  இங்கு கோயில் கொண்டுள்ள இறைவனின்  திருநாமம்  கோணபிரான்  மற்றும்  அக்னிபுரீஸ்வரர்.
 இறைவி  கருந்தாழ்குழலி யாகும்.  நல்லவனவற்றை மட்டுமேக்  கொடுக்க கூடியவர்  இங்குள்ள சந்திர சேகர மூர்த்தி. இவரை வழிபட பித்தளையும்  வைரமாகும். மேலும்  வெண்தாமரை அர்ச்சனையும், நெய்யன்ன நைவேத்தியமும் சோமவாரம், பௌர்ணமி தினங்களில் கொடுக்க    அறிவு வளர்ச்சி மிகுவதோடு நினைவாற்றல்  பெருகும்.  மேலும்   இங்குள்ள                           சிவபெருமானுக்கு  குளிர்ந்த   சந்தனத்தால்  அபிசேகம் செய்தால்  நற்புகழ் அடையலாம்.


Saturday 21 September 2013

64 சிவவடிவங்கள்(9. சோமாஸ் கந்த மூர்த்தி)

9. சோமாஸ் கந்த மூர்த்தி


சூரபத்மனின்  கொடுமைகள்  எல்லைக்கடந்து போயின. அவனது கொடுமைகளைத் தாள முடியாத விண்ணோர்கள் அனைவரும்  ஈசனிடம் சென்று  முறையிட்டனர்.   வல்லமைபெற்ற தங்கள் மகனால்  அவனது வாழ்வு முடிய வேண்டுமென அவர்கள்  விரும்பினர். சிவபெருமானும் அவர்களுக்காக  மனமிரங்கி தம்முடைய ஆறு திருமுகத்திலுமுள்ள  நெற்றிக் கண்ணிலிருந்து ஜோதிமயமான ஆறு நெருப்புப் பொறிகளை வெளிக்கொண்டு வந்தார். அப்பொறிகள்  அகிலமெல்லாம் பரவின. உடன் பார்வதி தேவியார் அவ்வெப்பம் தாளாமல் தம் கொலுசு மணிகள் ஒன்றோடொன்று  மோதி சிதறும் படி அந்தப்புரம்  நடந்தார்.  இதனால் தேவர்கள் சித்தம் கலங்கி, மனம் வருந்தினர். மகனைக் கேட்டால் இவர் நெருப்பு பொறிகளை கொடுக்கின்றாரென கலங்கினர். உடன் வாயு தேவனையும், அக்னிதேவனையும் அழைத்து அப்பொறிகளைக் கொடுத்து கங்கையில் விடச் சொன்னார்.  கங்கையோ  அப்பொறிகளை சரவணப்பொய்கையில் சேர்த்தது.

ஆறுமுகங்களும், பன்னிரு கரங்களுடனும்  பிறந்த இக்குழந்தையை கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி வளர்த்தனர்.   பார்வதி தேவியின் கொலுசுமணியில்  இருந்து சிதறிய  நவரத்தினங்கள்  நவ வீரர்களாயின. இதற்கிடையே சரவணப்பொய்கையில் வளரும் தங்கள் குமாரனைக் காண சிவனும், பார்வதியும் இடப வாகனத்தில் முன் செல்ல  தேவர்கள் பின் தொடர்ந்தன. அங்கு  ஆறு குழந்தைகளை பார்வதி  ஒன்றாக தூக்குகையில் அவை ஒரேக் குழந்தையாயிற்று. அந்த ஒரேக் குழந்தை ஆறு முகத்துடனும், பன்னிரு கரங்கள் கொண்டதாகவும்  விளங்கியது.  ஆறு முகங்களைக் கொண்டதால்  ஆறுமுகன் என்றும், கந்தன் என்றும்   அழைத்தனர்.  பின்னர் மூவரும் வெள்ளிமலையை  அடைந்தனர்.  அங்கே சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் இடையே கந்தன் வீற்றிருந்தார். அந்த தோற்றத்தையே நாம் சோமாஸ் கந்த மூர்த்தி என்கிறோம்.


சோமாஸ் கந்த மூர்த்தியை தரிசிக்க திருவாரூர் செல்ல வேண்டும். அங்குள்ள ஆயிரம் கால் மண்டபம்  அருகே  சுரக்கும்  அமுத தீர்த்தத்தினால்  சோமாஸ் கந்தரை அபிசேகம் செய்ய உடல் வலிமை, அறிவு விரத்தி, தந்தைக்கே      உபதேசிக்கும் அளவு  புத்தி வலுவடையும்.  மேலும் திங்கள், வியாழக்கிழமைகளில்  வில்வார்ச்சனையும், தயிரன்ன நைவேத்தியமும் கொடுக்க   குரு ஸ்தானம் விரைவில் கைகூடும். எழுத்தாளர்களுக்கு திறமை வளரும். எனவே எழுத்தாளர்கள்  தொழ வேண்டியவர் இவர்.


Friday 20 September 2013

64 சிவவடிவங்கள்(8.உமேச மூர்த்தி)

8.உமேச மூர்த்தி


முன்பொருமுறை நான்முகன் படைத்தல் தொழிலுக்கு நான்கு புதல்வர்களை தன்னுடைய தவ சக்தியால் உண்டாக்கினார். அந்த நால்வரும் படைத்தல் தொழிலை  மேற்க்கொள்ளாமல்  தவச்சாலையை நோக்கிச்  சென்றுவிட்டனர். பின்னர் நான்முகன் விஷ்ணுவை கானச்சென்றார். அவர்தம் குறைகளைச் சொன்னார். இக் குறைகளைப் போக்குபவர் சிவபெருமான் ஒருவரே, எனவே அவரைச் சென்று பார்ப்பதே உசிதமென நான்முகன், விஷ்ணு, நான்கு புதல்வர்கள் சகிதம் வெள்ளிமலையை அடைந்தனர். 

அவர்களை நெற்றிக்கண்ணால் சிவபெருமான் நோக்க, அவர்களனைவரும் எரிந்து சாம்பலானார்கள். அப்பொழுது  தனிமையில் இருந்த சிவபெருமான் தன் தோளைப்பார்க்க  அவரது  சக்தியே உமாதேவியாக  வடிவம் கொண்டு வெளிவந்தது. உடன்  உமாதேவியை தன் இடபுறமாக இருக்க  செய்தார்.  பின்னர் எரிந்து சாம்பலானவர்களை  முன் போலவே படைத்தார்.  அவர்கள் அனைவரும்  இவர்கள்  இருவரையும் வணங்கி நின்றனர்.  இருவரது அகமும் மகிழ்ந்ததால் அவர்கள் அனைவரும் கேட்ட வரத்தினைக் கொடுத்தார்.  உலகமே செழித்தது.   உலகிலுள்ள அனைத்து உயிர்களையும்  படைத்து, காத்து, துயர்துடைத்து அனைத்தையும் வாழவைக்கும் சக்தியை  உமையவளாக  இடது பாகத்தில்  வீற்றிருந்தக் கோலத்தைக் கண்டவர்கள் ஆனந்தப்பட்டனர். ஆகவே சிவபெருமானது பெயர்களில்  உமேச மூர்த்தியும் சேர்ந்துக் கொண்டது. 

 பொதுவாக சிவபெருமான் உமாதேவியோடு கூடியிருக்கும் திருக்கோலமே  உமேசமூர்த்தி யானது என்றும் சொல்லலாம்.  இத்தகைய சிறப்பு பெற்ற உமேசமூர்த்தியை தரிசிக்க  நாம் செல்ல வேண்டியத் தலம் திருஇடைமருதூர் ஆகும். கும்பகோணம் அருகே அமைந்துள்ள இத்தலத்தில்  கோயில் கொண்டுள்ள  உமேசமூர்த்தியை காவிரி நீரால் அபிசேகம் செய்தால் குடும்ப வாழ்வு இன்பமயமானதாக  அமைய அருள்புரிவார்.

Thursday 19 September 2013

64 சிவவடிவங்கள்(7. சுகாசன மூர்த்திதி)

7. சுகாசன மூர்த்தி


வெள்ளிமலையின் மீது கண்களைக் கூசச் செய்யும் ஒளி கொண்ட நவரத்தினங்களால் அலங்காரம் செய்யப்பட்ட  ஆயிரங்கால் மண்டபம் உள்ளது. அதில் ஜோதி மயமான சிவபெருமான் நடுவே நாயகனாக வீற்றிருக்க, அவரைச்  சுற்றிலும்  மும்மூர்த்திகளும் தேவகணங்களும், தேவலோக வாழ் அனைத்துமே அங்கே கூடியிருக்கின்றன. சிவபெருமானிடம் வேண்டிய வரங்களைக் கேட்க அவரும் வேண்டும் வரங்களை தந்தபடியே இருக்கிறார். நேரம் கடந்தது. அனைவரும் தங்களது பணிக்கு, இருப்பிடத்திற்கு திரும்பி விட்டனர்.

சற்றைக்கேல்லாம் உமாதேவியார் அங்கே பிரசன்னமாகி இறைவனின் தால் பணிந்து எம்பெருமானே சிவாகமங்களின்  உண்மைகளை, விளக்கங்களையும் எனக்கு புரியும் படி தாங்கள் கூற வேண்டும் என்று கேட்கிறார். 

 உடன் சிவபெருமான்  சிவாகமங்களின்   உண்மைகளையும் ,  விளக்கங்களையும், ஐவகை  பந்த பாசங்களின்  நிலையையும், அவற்றை நீக்கினால் கிடைக்கும்  நன்மைகளையும், சிவாகமங்கள்  பற்றிய அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கின்றார். அச்சமயம்  அவர்  சுகாசன நிலையில்  அமர்ந்த படி  உறைக்கிறார். அருகே உமாதேவியார் நின்று கொண்டுள்ளார். 

 சுகாசன நிலையில் சிவகாமங்களைப் பற்றி உறைத்த காரணத்தால்  இவரை நாம் சுகாசன   மூர்த்தி  என்கிறோம். இவரது கரங்களில் மான், மழு உள்ளது. தேவியார் அருகே இல்லை. 

இத்தகைய  சுகாசன மூர்த்தியை தரிசிக்க நாம் செல்ல வேண்டிய தலம் சீர்காழியாகும். இங்கு  கோயில் கொண்டுள்ள இறைவனது திருநாமம்  பிரம்மபூரிஸ்வரர், சட்டைநாதர், தோணியப்பர் என்று மூன்று திருநாமங்களை உடையவர். இறைவியின் திருநாமம் பெரியநாயகி யாகும். இங்கு   அருள்பாலிக்கும் சுகாசன மூர்த்தியை மனமுருக வேண்டி அர்ச்சிக்க வியாழன் சார்ந்த அனைத்து குறைகளும் தீரும். 


மேலும் தொழில் துறை நிர்வாகம் நல்ல முறையில்  நடைபெற இவர் நமக்கு அருள்புரிவார். வில்வ அர்ச்சனையும், கற்கண்டு நைவேத்தியமும் சோமவாரங்களில்  செய்தோமானால் நிர்வாகம் செழிப்பாகும். மேலும் இங்குள்ள சிவபெருமானுக்கு  உகந்த அபிசேகம் பலாப்பழத்தால் செய்யப்படுகிறது. இதனால் யோக சித்திகள் கைகூடும் என்பது ஐதீகம்.

Wednesday 18 September 2013

64 சிவவடிவங்கள்(6. உமா மகேச மூர்த்திதி)

6. உமா மகேச மூர்த்தி


திருக்கைலையில்  பொன்னும் மணியும் சேர்ந்து அமைந்த ஆசனத்தில் சிவபெருமான் தமது தேவியுடன் எழுந்தருளியுள்ளார். சிவபெருமானே உலக உயிர்கள் அனைத்திற்கும்  தந்தையாவார். அதுபோல உமாதேவியே உலகத்திலுள்ள அனைத்து உயிர்களுக்குமே  அன்னையாக விளங்குபவள். அவர் தன்னுடைய  இறைவனாகிய  சிவபெருமானின் என்னப்படியே  அனைத்துச்  செயல்களையும்  செய்து வருகின்றார்.  பூவிலிருந்து மணத்தையும், நெருப்பிலிருந்து  புகையையும் எப்படி பிரிக்க முடியாதோ  அதுபோல் இவர் சிவத்திடம்  ஐக்கியமானவராவர். கருணையே வடிவான இவர்  ஐவகை செயல்களுக்காய் ஐவகை பேதங்களாக மாறியுள்ளார்.  முறையே

1. பராசக்தி- இவர் பரமசிவத்திலிருந்து 1001 கூறு கொண்டவர்.
2. ஆதிசக்தி - பராசக்தியில் 1001 கூறு கொண்டதாகும்.
3. இச்சா சக்தி - ஆதிசக்தியில் 1001 கூறு கொண்டதாகும்.
4. ஞானசக்தி - இச்சா சக்தியில் 1001 கூறு கொண்டதாகும்.
5. கிரியாசக்தி - ஞானசக்தியில் 1001 கூறு கொண்டதாகும்.


இதில் பராசக்தி பக்குவமடைந்த  ஆன்மாக்களை அனுக்கிரகிக்கிறவள். ஆதிசக்தி நம்மிடமுள்ள ஆணவங்களைப் போக்கி பக்குவ நிலையைக் கொசடுப்பவர். ஞானசக்தி ஞானத்தை ஊட்டி நம்மிடம் ஞானத்தை ஒளிரும் படி செய்பவர். இச்சா சக்தி  திருஷ்டித் தொழில் செய்து நம்மை  சிருஷ்டிப்பவர்.  கிரியாசக்தி  உலகப் படைப்பை செய்பவர்.  மேற்க்கண்ட  இந்த  ஐந்து சக்திகளும்  ஒன்றினைந்து  ஒரு செயல்  செய்யும் போது  ஒன்றாகி  சதாசிவமூர்த்தியாகி  விடுகின்றது.  எனவே  சிவன் - சக்தி பிரிக்க முடியாத  ஒன்று. இத்தகைய   சிறப்பு வாய்ந்த   உமா மகேஸ்வர மூர்த்தியை  நாம் தரிசிக்க வேண்டிய தலம் கும்பகோணம் அருகேயுள்ள  கோனேரி ராஜபுரம் தான் செல்ல வேண்டும். இங்கு கோயில் கொண்ட மூர்த்தியே  உமாமகேஸ்வரர் ஆவார்.  இறைவி பெயர்  தேகசௌந்தரி என்பதாகும். இங்குள்ள தீர்த்தத்தில்  நீராடி இறைவி, இறைவனுக்கு  இளநீர், பால், தேன் அபிசேகம் செய்ய  கடுமையான  குஷ்ட நோயும் தீரும். இத்தல இறைவனின்  மற்றொரு திருநாமம்       பூமிநாதர்  என்பதாகும்.  பெயர்க்கேற்றார் போல் எந்த ஒரு தொழில் செய்யும் முன்பும்  இந்த பூமிநாதரை வணங்கி  இங்கிருந்து ஒரு பிடி மண் கொண்டு வந்து தொழில் செய்யும் இடத்தில் வைத்தால்  தொழில்  சிறப்படையும்.  புதன் தோறும்  சிவப்பு அல்லிப்பூவால் அர்ச்சனையும், சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியமும் செய்து வழிபட்டால் குடும்ப வாழ்வில் எந்தவொரு பிரச்சனையும் வராது. இருந்தாலும் விலகும்.இங்குள்ள மண்ணால் வினாயகர் செய்து நம் வீட்டில் வைத்து வழிபட எந்தவொரு காரியத்தடையும்  அகலும்.

64 சிவவடிவங்கள்(5. மகா சதாசிவ மூர்த்தி)

5. மகா சதாசிவ மூர்த்தி




இவர் கைலாயத்தில் இருப்பவர். இவர் இருபத்தி ஐந்து தலைகளும், ஐம்பது கைகளையும் கொண்டவர். எனவே இவரை நாம் மகா சதாசிவ மூர்த்தி என்கிறோம். அந்த கைலையில் இவரைச் சூழ்ந்தவாறே இருபத்தி ஐந்து மூர்த்திகளும் உள்ளனர். மேலும் இவரைச் சூழ்ந்தவாறு       ருத்ரர்களும், சித்தர்களும், முனிவர்களும் உள்ளனர். அனைவருமே மகாசதாசிவ மூர்த்தியை வணங்குகின்றனர். இவரை புராணங்கள் கைலாயத்தில் உள்ளவராகச் சொல்கின்றன. மேலும் மகா கைலாயத்தில் இருந்து கொண்டு அனைத்து உயிர்களுக்கும் அருள் பாலித்து அனுக்கிரகம் செய்வதால் இவரை அனுக்கிரக மூர்த்தி என்றேக் கொள்ளுதல் வேண்டும். மேலும் இவரை இன்ன உருவம் தான் எனக் கூற முடியாது.  அனைத்தும் கலந்த திருமேனியுடையவர் என புராணங்கள் கூறுகின்றன. இவரை நாம் தரிசிக்க செல்ல வேண்டிய தலம் காஞ்சிபுரமாகும். காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள இவரை கோயிலுள் காண முடியாது. சுரகரேஸ்வரர் கோயில் விமானத்தில் சுதை சிற்பமாகத்தான் காண முடியும். மேலும் பல கோயில் விமானங்களில் தான் தரிசிக்க முடியும்.

இவரை வணங்கினால் சிவ தரிசனம் விரைவில் கைகூடும்  என்பது ஐதீகம். மேலும் கடுமையான காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் கருப்பஞ்சாறால் இவரை அபிசேகம் செய்தால் கடும் காய்ச்சல் நீங்கி தேகம்   ஆரோக்கியம் பெறும் என்றும் கூறப்படுகிறது.







Tuesday 17 September 2013

அனந்த விரத மகிமை(must read 18.9.2013)

அனந்த விரத மகிமை




வாழ்க்கையில் பொருள் இழப்பு ஏற்பட்டால் அனைவருக்கும் மனதில் சொல்ல முடியாத சங்கடம் தான் ஏற்படும். அந்த சங்கடம் விலகி குடும்பத்தில் மீண்டும் ஒரு வசந்தம் வந்திட விரதங்கள் வரிசையில் சொல்லப்பட்ட சக்திவாய்ந்த விரதம் தான் அனந்த விரதம். வருகிற 18-ந் தேதி (புதன்கிழமை) இந்த விதரத தினமாகும். 

பகவான் ஸ்ரீமந்நாராயண மூர்த்தியே இந்த விரதத் தின் சிறப்பைப்பற்றி தர்மபுத்திரருக்கு எடுத்துக் கூறி புரட்டாசி மாத வளர்பிறை சதுர்தசி நாளில் உபவாசம் இருந்து வழிபடுபவர்களுக்கு ஆனந்த மயமான தருணங்களைத் தருவதாகக் கூறி அருளினார். 

அகத்தியமா முனிவர், திலீபன், பரதன், அரிச்சந்திரன் ஜனகன் முதலியவர்கள் இவ்விரதத்தைக் கடைப்பிடித்து தாங்கள் இழந்த நாடு நகரம் பொருட்களைத் திரும்பப் பெற்றனர். 

யாருக்குக் கணவன் வீட்டை விட்டுச் சென்று திரும்பி வராமல் வருந்துகிறார்களோ அவர்களும், வீடு, சொத்து, சொந்தங்களை இழந்து தவிக்கிறார்களோ, அவர்கள் இந்த விரதத்தால் பூரணபலனைப் பெறலாம். பூஜைக்குப் பயன்படுத்தக்கூடாது என்று சிவபெருமான் தவிர்த்த தாழம் பூவை இந்த விரத பூஜையில் பயன்படுத்தலாம். 

அனந்த விரத மகிமைக்கதை: 

வசிஷ்ட மகரிஷியின் பரம்பரையில் உதித்தவர் தான் சுமந்தர். அவரது திறமையைக்கண்ட ப்குரு முனிவர் தன் மகள் தீட்சாவைத்திரு மணம் செய்து வைத்தார். இல்லரத்தில் ஈடுபட்ட இவர்களுக்கு ஷீலா என்ற பெண் குழந்தை பிறந்தது. முற்பிறவி கர்மவினையின் காரணமாக அன்பான கணவனையும், ஆசைகளோடு வளர்த்த குழந்தையை விட்டுக் காலமாகி விட்டாள். 

தன் குழந்தையை வளர்க்கவும் கிரஹஸ்தாச்ரம தர்மத்தினைக் காக்கவும் கன்யகா என்ற பெண்ணை மறுமணம் செய்து கொண்டார் சுமந்தர். இரண்டாவதாக வந்த தாய் மிகவும் கொடூர குணம் உடையவளாகிடவே, ஷீலா தன் தாயைப்போல நல்ல குணம் உடையவனாக விளங்கினான். திருமண வயதை எட்டிய ஷீலாவை கௌடில்யர் என்ற ஆண் மகனுக்கு மணமுடித்துக் கொடுத்தார்கள். 

புகுந்த வீட்டிற்குக் கிளம்பிய ஷீலாவுக்கு எந்த சீதனப் பொருட்களும் கொடுத்தனுப்பாமல் இரண்டு சத்துமாவு உருண்டைகளை மட்டும் கொடுத்து வழியனுப்பி விட்டாள். மனவருத்தம் அடைந்த சுமந்தர். இவனைப் பெற்ற தாய் இங்கிருந்தால் வெறும் கையோடு அனுப்புவானா? என்று கலங்கினார். 

ஷீலாவும் தன் விதி அதுவானால் என்ன செய்வது என்று எண்ணி புறப்பட்டாள். போகும் வழியில் ஒரு ஆற்றங்கரை தென்படவே அங்கு சில பெண்கள் தனித்தனியாக ஏதோ பூஜை செய்வதைக் கண்டு அவர்களை நெருங்கி, இது என்ன பூஜை செய்கிறீர்கள்? என்று கேட்க அப்பெண்கள் அனந்த விரத பூஜையைப் பற்றித் தெளிவாக விளக்கிக் கூறினார்கள். அதை பக்திப் பெருக்கோடு கேட்டபடி சிலரிடம் பொருள் சேகரித்து வந்து பூஜையைத் தொடங்கினாள். 
எல்லாமே பதினாங்காக: 

அனந்த விரத பூஜையில் எல்லாப் பொருட்களும் 14 எண்ணிக்கையில் இருக்க வேண்டும். அதனால், பதினான்கு ஆண்டுகள் இந்த விரதத்தைத் தொடர்ந்து செய்வது என்ற முடிவோடு எல்லாவற்றையும் பதினான்கு என்றபடி செய்து வந்தாள். 

ஐதீகப்படி கோதுமை மாவில் வெல்லத்தைக் கலந்து அதில் 28 பாகங்கள் பிரித்துப் பதினான்கு பாகங்களை ஏழைகளுக்குத் தானமாக அளித்து வந்தாள். ஷீலா இப்படிச் செய்து கொண்டிருக்கும் போதே அனந்தரின் அருள் கிடைந்து ஆனந்தம் கொடுக்கும் செல்வங்களை ஒவ்வொன்றாகப் பெற்றாள். 

செல்வநிலை உயர்ந்து விட்ட போதும் விரதத்தை விடாமல் செய்து வந்தாள். ஆனால், செல்வங்கள் அனைத்தும் சேர்ந்துவிட்ட நிலையில் ஷீலாவின் கணவர் கௌண்டின்யருக்கு ஆணவம் தலைக்கு ஏறிக் கொண்டது. ஒருநாள் ஷீலாவின் கையில் கட்டியிருந்த மஞ்சள் கயிறைக்கண்டு இதென்ன அசிங்கமாக உள்ளதுப என்று அதை அறுத்து எரியும் தீயில் போட்டார். 

பதறிப்போன ஷீலா, அடடா இந்தக் கயிறு அனந்தரின் வடிவமாயிற்றேப என்றபடி பாலில் போட்டு விட்டாள். இதனால் நாட்கள் செல்லச் செல்ல கௌண்டின்யரின் செல்வங்கள் எல்லாம் குறைந்துவிட்டது. கொட்டிலில் கட்டி இருந்த கறவை மாடுகள் அனைத்தும் திருடர்களால் கவர்ந்து செல்லப்பட்டன. 

வீடு ஒருநாள் தீயில் கருகிச் சாம்பலாகிவிட மழை பெய்தால் அமர்ந்திட, இடம் இன்றி இருவரும் தவித்தனர். உறவினர்கள் எல்லாரும் இவர்கள் நிலையைக் கண்டு கேலியும் கிண்டலும் செய்தனர். மனம் வருந்திய கௌண்டின்யர் அனந்தனே! காப்பாய் தவறு செய்து விட்டேன் நீ எங்கே இருக்கிறாய் என்று அங்கும் இங்குமாக ஓடத் தொடங்கினார். 

தனது இருப்பிடத்திலிருந்து புறப்பட்ட கௌண்டியர்கள் வழியில் காண்பவர்கள் எல்லோரிடமும் அநந்தனைக் கண்டீர்களா? என்று விசாரிக்கத் தொடங்கினார். கடைசியில் ஒரு திருமாளிகைக்கு சென்றார். 

அதனுள் சென்றதும் பலவிமான பொன்மணிகள் நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட ரத்தின சிம்மாசனத்தில் கருட வாகனத்தின் மேல் சங்கு சக்கரம் ஏந்தியபடி அனந்தன் அமர்ந்திருப்பதைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் விட்டு அவர் காலடியில் விழுந்து வணங்கினார். 

பகவான் அனந்தன் அவரை வாழ்த்தி முதலில் தர்மசிந்தனை ஏராளமான பொருட்செல்வம், வைகுண்ட பிராப்தி ஆகிய மூன்று பெரிய வரங்களைக் கொடுத்தார். இதைக்கேட்ட கௌண்டின்யர் இப்பிறவியில் தங்கள் தரிசனம் கிடைத்த நான் பாக்கியசாலி ஆவேன் என்று வணங்கி தன் வாழ்நாள் முழுவதும் மனைவி சீலாவுடன் சேர்ந்து அனந்த விரதத்தைக் கடைப்பிடித்துப் பட்டுக் கயிறைக் கட்டிக் கொண்டார். 

இதனால் அவருக்கு சகல போக பாக்கியங்களும், செல்வங்களும் வந்து சேர நீண்ட காலங்களுக்கு வாழ்ந்ததோடு இருக்கும் வரை தான தர்மங்களைச் செய்து ஒரு புகழ் மனிதனாக வாழ்ந்தார். 

விரதபூஜை செய்யும் முறை: 

பூஜைக்குத் தேவையான துளசி, மலர்கள் ஐந்து விதமான பழங்கள் சர்க்கரை, அன்னம், புளிசாதம் வைத்துக் கொண்டு முதலில் விநாயகரை மஞ்சள் பொடியில் செய்து அருகம் புல்லால் வழிபட வேண்டும். 

ஓம் வேழமுகத்தவா போற்றி, 
ஓம் வெள்ளைக் கொம்பனே போற்றி! 
ஓம் சிவசக்தி மைந்தனே போற்றி 
ஓம் சிறப்புறு மணியே போற்றி, 
ஓம் சேய் நலம் காப்பாய் போற்றி! 

என்று கூற வேண்டும். 

தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு படைத்து கற்பூர ஆரத்தி செய்ய வேண்டும். பிறகு அன்றைய திதி, கிழமை நட்சத்திரமான சதுர்தி சௌம்ய வாசரம் (புதன்கிழமை) சத்ய நட்சத்திரம் சொல்லிக்கொண்டு அனந்த விரத பூஜை செய்கிறேன் என்று கூறுக. விநாயகரை தீர்த்தம் விட்டு நகர்த்திய பிறகு கலச பூஜை செய்க.

யமுனா பூஜை: 

அனந்த விரத பூஜையின் போது நேரடியாக அனந்தனை வழிபடுகின்றனர். சதியான முறை என்னவென்றால், முதலில் யமுனா பூஜையைச் செய்ய வேண்டும். அதன்படி கலசத்தின் மேல் யமுனா தேவியை பூஜிக்க வேண்டியதே முறை, இதில் ஒரு பிடி (28 தர்ப்பையால்) ஆதிசேடனை நினைத்து பாம்பு வடிவம் செய்து கலசத்தின் கீழே வைக்க வேண்டும். 

அரவத்தின் உருவான ஆதிசேடனே! ஆனந்த வடிவே பரந்தாமன் பூஜை செய்ய பணிவுடனே எழுந்திடுக! என்று அதன் மேல் துளசி, சந்தனம், குங்குமம் வைக்க வேண்டும். பிறகு கும்பத்தின் மேல் யமுனா பூஜை. 

ஓம் யமுனா தேவியே போற்றி! 
ஓம் கானிந்தினியே போற்றி! 
ஓம் தயை உருவே போற்றி! 
ஓம் காவிரியே போற்றி! 
ஓம் தாமிரபரணியே போற்றி! 
ஓம் கோதாவரியே போற்றி! 
ஓம் சகல நதி உருவமே போற்றி! 

என்றபின் தூபம் தீபம் நிவேதனமாகக் கற்கண்டு தாம்பூலம் படைத்து ஆரத்தி காட்ட வேண்டும். 

அனந்த விரத பூஜை: 

பதினான்கு தர்ப்பைகளை எடுத்து நுனியில் முடிச்சு இட்டு அதை பெண் ஜடை பின்னுவது போலப் பின்னி மூன்று கால்களாகப் பிரித்துக் கலசத்தின் மேல் வைக்க வேண்டும். (யமுனா பூஜைக்காகத் தனியாகச் சிறுகலசம் வைப்பதும் இந்த விதியில் செய்யலாம்). 

பிரதான தெய்வமாக அனந்தனை இதில் ஆவாகன பூஜை செய்ய வேண்டும். துளசி, சாமந்தி, செவ்வரளி மல்லிகை மலர்களைக் கலந்து அதில் பன்னீர் தெளித்து விட்டு பூஜை செய்ய வேண்டும். 

ஓம் அனந்தனே போற்றி! 
ஓம் ஆதிசேடனே போற்றி! 
ஓம் கால வடிவே போற்றி! 
ஓம் விஸ்வரூபனே போற்றி! 
ஓம் உலக நாயகா போற்றி! 
ஓம் அருள்வதில் எளியோய் போற்றி! 
ஓம் தேவியின் அன்பனே போற்றி! 
ஓம் சக்கரம் ஏந்தியவரே போற்றி! 
ஓம் உருவத்தில் உயர்ந்தவரே போற்றி! 
ஓம் கேசவா போற்றி! 
ஓம் நாராயணா போற்றி! 
ஓம் மாதவனே போற்றி! 
ஓம் கோவிந்தனே போற்றி! 
ஓம் விஷ்ணுவே போற்றி! 
ஓம் மதுசூதனனே போற்றி! 
ஓம் ஆனந்த வடிவே போற்றி! 
ஓம் அனந்த பத்ம தாபரே போற்றி! போற்றி! 

மலர் அரச்சனை செய்து முடிந்ததும் ஊதுபத்தி, தீபம் காட்டி அன்னங்களையும், பழங்களையும் படையலாக வைத்து நிவேதனம் செய்க. கையில் மலர்களுடன் துளசி எடுத்துக் கொண்டு தன்னையே மும்முறை சுற்றிக் கொண்டு ஆத்ம பிரதட்சிணம் செய்து புஷ்பாஞ்சலி செய்து விட வேண்டும். 

கை கூப்பியபடி, பச்சைமாமலை போல் மேனிப் பவளவாய்க் கமலச் செங்கண் அச்சுதா! அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர, யான் போய் இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே!- என்று மூன்று முறை இப்பாடலைக் கூறி விழுந்து வணங்கி எழுந்து- அனந்தா! என்று மும்முறை கூறி ஒரு தாம்பூலத்தில் துளசி வைத்து அதில் தீர்த்தம் விட்டு அதைக் கலசம் அருகில் விட்டு கற்பூர ஆரத்தி செய்ய வேண்டும். 

மஞ்சள் சரடு வைத்தல்: 

பதினான்கு மஞ்சள் கயிறுகளை 14 முடிச்சிட்டு ஒரு தட்டில் வரிசையாகப் பரப்பி அவற்றை வரிசையாக சரியை, மகாபலா, அஜா, மங்காளயை, சுபாயை, ஐயாயை, விஜயாயை, ஜயந்தியை, பாவநாசினி, விஸ்வரூபா, சர்வமங்களா, பார்சுவா, ராமா, கிருஷ்ணா என்ற பெயர்களைக் கூறி மலர் போட வேண்டும். 

இதற்கு தோரகக்ரந்தி பூஜை என்று சொல்வார்கள். இவற்றிற்கு தூபம், தீபம், நிவேதனம், கற்பூரம் காட்டி வணங்கிய பின் முதலில் ஒரு 7 வயது ஆண் குழந்தையை மனைப் பலகையில் அமர வைத்து அனந்தனாக பாவனை சÙய்து மலர்ச்சரம் அணிவித்து பிரசாதங்களைச் சிறிதளவு தட்டில் வைத்து தாம்பூலத்துடன் கொடுத்து அனந்த ரூபனே ஆனந்த வடிவே! கண்ணனே! 

எங்கள் குடும்பம் நலம் பெற வாழ்த்திட வேண்டும் என்று அந்தச் சிறுவனின் கையில் மலர் கொடுத்து உங்கள் தலையில் போடச் சொல்ல வேண்டும். மனையில் அனந்த விரதம் செய்த மஞ்சள் கயிறுகளை முதலில் வெளியிலிருந்து வந்திருக்கும் உறவினர் அல்லாதவர்களை அமர வைத்துக் கையில் வெற்றிலை பாக்கு பழம் கொடுத்து கட்டி விட வேண்டும். 

பிறகு, எளிய வகையில் பிரசாதங்களை எடுத்து பகல் உணவுடன் சாப்பிட்டுத் தனியாக சுத்தமான இடத்தில் அமர்ந்து மேற்சொன்ன அனந்த விரத மகிமைக் கதையைப் படிக்க வேண்டும். உங்களுக்குத் தெரிந்த கதைதான் என்றாலும் அதை, அனந்தனின் திருவிளையாடலாக நினைத்து 5 தடவைகள் படிப்பது அவசியம். 

அனந்த விரதம் இந்த ஆண்டு மிகவும் சிறப்பானதாக வருகிறது. அதற்குக் காரணம் புதன் கிழமை. மகாவிஷ்ணுவுக்கு உரிய தினம். சத்ய நட்சத்திரம் பாம்பு உருவான ஆதி சேடனுக்கு உரியது என ஜோதிட உலகம் கூறுகிறது. புரட்டாசியின் முதல் புதனில் வருவது மிகச் சிறந்த தினமாகவும் வருகிறது. அனந்த விரதம் செய்தால் உங்கள் வாழ்வில் ஆனந்தமயமான எதிர் காலத்தைக் கொண்டு வரும்.



Monday 16 September 2013

64 சிவவடிவங்கள் 4. சதாசிவ மூர்த்திதி )

4. சதாசிவ மூர்த்திதி       

         
                      சடாமுடியிடன் காட்சியளிக்கும் இவர் ஐந்து திருமுகங்களைக் 

கொண்டவர் ஆவார். தலைக்கு இரண்டாக பத்துக் கைகளைக் 

கொண்டவர். இவறுடைய வலக்கையில் சூலமும், மழுவும், 

கட்வங்கமும், வாளும், பீஜா பூரகமும், வச்சிரமும், அபயமுத்திரையும் 

கொண்டு காட்சியளிக்கும். இடக்கையில் நாகம், பாசம், நீலோற்பலம், 

அங்குசம், டமருகம், வரதம், மணிமாலை, பரிவட்டம் எனக்காணப்படும். 

இவர் ஸ்படிக நிறத்துடன் காட்சிக்கொடுப்பவர். மேலும் தியான 

பூஜைக்காக சகளத்திருவுருவத்துடன் காட்சியளிப்பவர். இவரது 

இடைப்பாகத்தில் சதாசிவனும், மேற்கே ஈசனும், வடக்கே பிரமனும், 

தெற்கே திருமாலும், கிழக்கே ஈசனும்  அடங்கியுள்ளனர். இம் 

முர்த்திகள் ஐவரும் அடங்கியள்ள நிலையை நாம் கன்மசா தாக்கியம் 

என்போம். இத்தகைய பெருமைகளைக் கொண்டவர் சதாசிவ 

மூர்த்தியாவார். சாந்த சொருபீயான இவரே அனைத்திற்கும் 

காரணகர்த்தாவாவார். இந்த மூர்த்தி ஈசானம், தத்புருடம், வாமம், 

அகோரம், சத்யோஜாதம் முதலான ஐந்து திருமுகங்களுடன் 

எழுந்தருளியிருப்பவர். முனிவர் கௌசிகரின் பொருட்டு இவரது 

சத்யோகஜாத  முகத்திலிருந்து காமிகம், யோகசம், சிந்தியம், காரணம், 

அசிதம்  என்னும் ஐந்து  ஆகமங்களை அருளினார்.

                    காசிபமுனிவருக்காக வாமதேவ முகத்திலிருந்து தீப்தம், சூக்குமம், 

சகச்சிரம், அஞ்சுமான், சுப்பிரபேதம் என்ற ஆதமங்களை அருளினார். 

பரத்வாஜருக்காக அகோரமுகத்திலிருந்து விசயம், நீச்சுவாசம், 

சுவயம்புவம், ஆக்நேயம், வீரம் ஐந்து ஆகமங்களையும் அருளினார். 

கௌதம முனிவரின் பொருட்டு தத் புருட முகத்தினின்று ரௌரவம், 

மகுடம், விமலம், சந்திரஞானம்,  முகவிஷ்பம் என்ற ஐந்து 

ஆகமங்களையும் அருளினார். முடிவில்  அகத்தியருக்காக  ஈசான 

முகத்திலிருந்து புரோத்கீதம், இலளிதம், சித்தம், சந்தானம், சர்வோக்தம், 

பரமேச்சுவரம், கிரணம், வாதுளம் எனும் எட்டு   ஆகமங்களையும் 

அருளினார். 

 கோயில் :


இவரை தரிசிக்க  நாம் செல்ல வேண்டிய தலம் சிதம்பரமாகும்.
இங்குள்ள கோயில் பிரகாரத்தில் ஐந்து பீடங்கள் உள்ளன. இங்கே
 சதாசிவமூர்த்தி அருளிபாலிக்கிறார். இங்குள்ள சிவகங்கைத்
தீர்த்தத்தால் அபிசேகம் செய்து வில்வ இலை அர்ச்சிக்க அனைத்து
மூர்த்திகளையும் வணங்கிய, அர்ச்சித்த பலன் கிடைக்கும். மேலும்
சோமவாரத்தில் மிளகு சீரக சாதத்தால் நைவேத்தியம் செய்ய
மறுபிறவியில்லை எனும் நிலையை அடையலாம். இங்குள்ள
சிவபெருமானை திருநீரால் அபிசேகம் செய்ய சகல நன்மையும்
உண்டாகும்.

Sunday 15 September 2013

சண்டிகேஸ்வரர் முன்பு கை தட்டலாமா?

சண்டிகேஸ்வரர் முன்பு கை தட்டலாமா?





சிவன் கோவில்களில் சண்டிகேஸ்வரர் சன்னதியை நீங்கள் பார்த்திருப்பீர்கள். சிலர், அந்த சன்னதியை அடைந்ததும் பவ்வியமாக கை தட்டுவார்கள். இன்னும் சிலர் பலமாக கை தட்டுவார்கள். மேலும் சிலர் அமைதியாக கன்னத்தில் போட்டுக் கொள்வார்கள். உண்மையிலேயே இப்படிச் செய்யலாமா?
அதற்கு முன், யார் இந்த சண்டிகேஸ்வரர் என்று பார்த்து விடுவோம்...
சோழநாட்டில் சேய்ஞ்ஞலூர் என்ற திருத்தலம் உள்ளது. இங்கு எச்சதத்தன்-பவித்திரை தம்பதியினர் வசித்தனர். இவர்களது மகன் விசாரசருமன். இவன் சிறு வயதிலேயே சிவபக்தி கொண்டவனாக வளர்ந்தான். பசுக்களை மேய்க்கும் தொழிலை மேற்கொண்டதால் பசுக்கள் இவனை தாங்கள் உயிராக கருதின. மாடு மேய்க்க செல்லும் இடத்தில் மணலில் சிவலிங்கம் வடிப்பது இவனது வழக்கம்.

மேய செல்லும் பசுக்கள் அதன்மேல் பாலை சுரந்து அபிஷேகம் செய்யும். இவ்வாறு சிவ சேவை செய்த பசுக்கள் வீட்டுக்கு வந்த பிறகும் தங்கள் எஜமானர்களுக்கும் தேவையான பாலை சுரந்து கொடுத்து வந்தன. ஒருமுறை அந்த ஊர் இளைஞன் ஒருவன் சிவலிங்கம் மீது பசுக்கள் பால் சுரந்ததை பார்த்து விட்டான்.
அத்துடன், விசாரசருமன் அதை கண்டு கொள்ளாமல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி ஆனான். ஊருக்குள் சென்று நடந்த விவரத்தை தெரிவித்தான். மாடுகளின் உரிமையாளர்கள் இதுகுறித்து எச்சதத்தனிடம் சொல்லி, மகனை கண்டிக்கும்படி கூறினர். அவர் உண்மையை அறிய ஒருநாள் மாடு மேய்க்கும் இடத்துக்கு வந்து மறைந்து நின்று கவனித்தார்.
மாடுகளின் உரிமையாளர்கள் கூறியபடியே மண் லிங்கத்தின் மீது பசுக்கள் பாலை சொரிந்தன. விசாரசருமன், அந்த மணல் லிங்கத்தின் முன் ஆழ்ந்த தியானத்தில் இருந்தான். அதைப் பார்த்த எச்சதத்தனுக்கு கோபம் வந்து விட்டது. மகனை உதைத்து கண்டித்தார். மேலும், மணல் லிங்கத்தை காலால் மிதித்து உடைத்தும் விட்டார்.
இதனால் கோபம் அடைந்த அவரது மகன் விசாரசருமன், அவரது கால் மீது தன் கையில் இருந்த குச்சியை எறிந்தான். அது சிவன் அருளால் கோடரியாக மாறி அவரது காலை காயப்படுத்தியது. அளவு கடந்த பக்தி காரணமாக தந்தையையே தாக்க துணிந்த அந்த அதி தீவிர பக்தன் முன்பு பார்வதி தேவியுடன் தோன்றினார் சிவன்.

எச்சதத்தனின் காயத்தை மறையும்படி செய்தவர், விசாரசருமனுக்கு சிவ கணங்களை நிர்வாகம் செய்ய சண்டிகேச பதவியை வழங்கினார். அதோடு, தனக்கு சூட்டப்படும் மாலை, நைவேத்யம் ஆகியவை அவருக்கே தினமும் வழங்கப்படும் எனவும் அருள்பாலித்தார். இதன்படி சிவனுக்கு அணிவித்த மாலையையே சண்டிகேஸ்வரருக்கும் அணிவிக்கும் பழக்கம் இருக்கிறது.
சிவன் கோவிலுக்கு வருபவர்கள் சண்டிகேஸ்வரை வணங்காமல் சென்றால் அவர்கள் ஆலயத்துக்கு வந்த பலன் கிடைக்காது என்பது நம்பிக்கை. சண்டிகேஸ்வரர் சிவ தியான நிலையில் இருப்பவர். இவர் முன் பலர் கை தட்டி வணங்கி சுற்றி வருகின்றனர்.
இவ்வாறு செய்தால் இவரது தியானம் கலைந்து விடும் என்பது ஐதீகம். அதனால் அவர் முன்பு கை தட்டி வணங்காமல் அமைதியாக வணங்குவதே சரியானது. சண்டிகேஸ்வரரை வணங்கினால் மன உறுதியும், ஆன்மிக பலமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சனி தோஷம் போக்கும் புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் வழிபாடு

சனி தோஷம் போக்கும் புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் வழிபாடு


சூரியன் ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு ராசியில் சஞ்சாரம் செய்வார். குறிப்பாக புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி ராசியில் சஞ்சாரம் செய்கிறார். கன்னி ராசியின் அதிபதியான புதனின் அதிதேவதை விஷ்ணு. எனவே மகாவிஷ்ணுவை புரட்டாசியில் வழிபடுவதன் மூலம் கூடுதலான பலன்கள் பெறலாம். புரட்டாசியில் பெருமாளை வழிபடுவதால் புதனின் அருளும் சிறப்பாக கிடைக்கும்.



புத்திக்கூர்மை, கற்றல், கற்பித்தல் போன்றவற்றுக்கு அதிபதி புதன். புதன் பகவான், சந்திரனுக்கும் தாரைக்கும் மகனாகப் பிறந்தவர். சகல கலைகளிலும் வல்லவர். மகா ஞானியாக விளங்குபவர். கிரகங்களில் சுபக்கிரகர் என்பதால் இவரை வழிபடுகிறவர்களுக்கு மிகுதியாக அறிவைக் கொடுப்பவர். ஞானமளிப்பவர், வாக்கு சாதுர்யம் அளிப்பவர்.

தீயக்கிரகங்களால் உண்டாகும் பீடைகளை நீக்கும் ஆற்றலுடையவர். எனவே புரட்டாசி மாதத்தில் புதனையும் இவரின் அதிபதி மகாவிஷ்ணுவையும் வழிபடுவதால் சனி, ராகு, கேதுக்களால் உண்டாகும் தோஷங்களை போக்கிக் கொள்ளலாம். புதனின் நட்புக்கிரகம் சனி. இதனை வழிபடுவதால் சனிபகவான் தோஷம் குறையும்.

புரட்டாசி சனிக்கிழமைகளில் வெங்கடேசப் பெருமாளுக்கு மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்வது சிறப்பு தரும். திருப்பதியில் புரட்டாசி சனிக்கிழமைகளில் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பாகும். புரட்டாசியில் கொண்டாடப்படும் திருப்பதி பிரம்மோற்சவம் குறிப்பிடத்தக்கது.

 சூரிய உதயத்தில் எழுந்து குளித்து பெருமாள் சன்னதிக்குச் துளசிமாலை வாங்கி சென்று வழிபட வேண்டும். இனிப்பும், எள்ளும் கலந்து இடித்து காகத்திற்கும் உணவு அளிக்கலாம். இதன் மூலம் சனி தோஷம் விலகுவதாக நம்பிக்கையாகும்.