Thursday 28 November 2013

அருள்மிகு புண்டரீகாட்சன் திருக்கோயில்( 108 திவ்ய தேசங்கள்)

4.அருள்மிகு புண்டரீகாட்சன் திருக்கோயில்



தல வரலாறு:


ஒரு முறை திருப்பாற்கடலில் மகாவிஷ்ணுவும், மகாலட் சுமியும் 

பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பெருமாள், ""லட்சுமி உனது கருணையால் 

இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் மிகவும் சந்தோஷமாக உள்ளது. 

இதனால் எனக்கு பரம திருப்தி ஏற்படுகிறது. எனவே உனக்கு வேண்டிய 

வரத்தை என்னிடமிருந்து கேட்டு பெறலாம்'' என்கிறார். அதற்கு லட்சுமி, 

""தங்களின் திருமார்பில் நித்ய வாசம் செய்யும் எனக்கு வேறு வரம் எதற்கு'' 

என்கிறாள்.இருந்தாலும், எனது பிறந்த இடமான இந்த பாற்கடல். இங்கு 

தேவர்களை காட்டிலும் எனக்கு தான் அதிக உரிமை வேண்டும் என்கிறாள். 

அதற்கு பெருமாள், ""உனது கோரிக்கையை இங்கு நிறைவேற்ற முடியாது. 

இங்கு நான் தான் அனைத்துமாக இருக்கிறேன். இருந்தாலும் பூமியில் சிபி 

சக்கரவர்த்திக்கு நான் தரிசனம் தரும்போது உனது விருப்பத்தை நிறைவேற்றி 

வைக்கிறேன்'' என்கிறார். ஒரு முறை இந்தியாவின் தென்பகுதியில் 

ராட்சஷர்கள் மிகுந்த தொல்லை கொடுத்து வந்தார்கள். அவர்களை அடக்க சிபி 

சக்கரவர்த்தி தன் படைகளுடன் அழிக்க செல்லும் போது ஒரு வெள்ளை பன்றி 

அவர்கள் முன் தோன்றி இவர்களுக்கு பெரும் தொந்தரவு கொடுத்தது. 

படைவீரர்களால் அந்த பன்றியை பிடிக்க முடியாமல் போக, சக்ரவர்த்தியே 

அதை பிடிக்க சென்றார். பன்றியும் இவரிடம் பிடிபடாமல் இங்கு மலைமீதுள்ள 

புற்றில் மறைந்து கொண்டது. அரசனும் இதை பிடிக்க மலையை சுற்றி வரும் 

போது, ஒரு குகையில் மார்க்கண்டேய முனிவர் கடுமையாக தவம் செய்து 

கொண்டிருப்பதை கண்டு அவரிடம் விஷயத்தை கூறினான். அதற்கு 

முனிவர்,""நீ மிகவும் கொடுத்து வைத்தவன். நாராயணனின் தரிசனத்திற்கு 

தான் நான் தவம் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் அவர் உனக்கு வராக 

(பன்றி) உருவத்தில் உனக்கு காட்சி கொடுத்திருக்கிறார். நீ இந்த புற்றில் பாலால் அபிஷேகம் செய்'' என்கிறார். அரசனும் அப்படியே செய்ய நாராயணன் தோன்றி 

அனைவருக்கும் காட்சிகொடுக்கிறார். இந்த தரிசனத்திற்கு வந்த 

மகாலட்சுமியிடம்,"" நீ விரும்பியபடி இத்தலத்தில் உனக்கு சகல 

அதிகாரத்தையும் தந்து விட்டு, அர்சாரூ பமாக இருந்து கொண்டு நான் 

அனைவருக்கும் அருள்பாலிக்கிறேன்'' என்கிறார் பெருமாள்.இதன் பின் அரசன் 

அனைவரிடமும் விடைபெற்று ராவண ராட்சஷர்களை அழிக்க சென்றான். 

ஆனால் மார்க்கண்டேயர், இவர்களை அழிக்க பெருமாள் ராம அவதாரம் எடுக்க

உள்ளார். எனவே நீ திரும்ப நாட்டை ஆள செல் என்கிறார். ஆனால் 

மன்னனுக்கு மனம் திருப்தி அடையவில்லை. அதற்கு 

மார்க்கண்டேயர்,""உனக்கு தரிசனம் கொடுத்த பெருமாளுக்கு நீ கோயில் கட்டி 

திருப்தி பெறுக'' என்கிறார். அரசனும் கோயில் கட்டி, சேவை செய்வதற்காக 3700 

குடும்பங்களை அழைத்து வந்தான். வரும் வழியில் ஒருவர் இறந்து விட்டார். 

அதற்கு பெருமாள், அரசனிடம் நீ கவலைப்பட வேண்டாம். நானே 

இறந்தவருக்கு பதிலாக 3700 பேரில் ஒருவராக இருந்து, நீ நினைத்த 

மூவாயிரத்து எழுநூறு குடும்பக்கணக்கு குறைவு படாமல் பார்த்து 

கொள்கிறேன் என்கிறார். பெருமாள் அளித்த வரத்தின் படி தாயார் 

செங்கமலவல்லி மூலஸ்தானத்திலேயே இருந்து கொண்டு, திருவிழா 

காலங்களில் பெருமாளுக்கு முன்பாக பல்லக்கில் எழுந்தருளுகிறார்.



தலபெருமை:


108 திருப்பதிகளுள் ஒன்றான இத்தலத்தில் உய்யக்கொண்டார் எங்களாழ்வான் 

அவதாரம் செய்துள்ளார். இங்குள்ள பெருமளை தரிசிக்க 18 படிகளை கடக்க 

வேண்டும். இவை கீதையின் 18 அத்தியாயங்களை குறிக்கிறது. அடுத்த கோபுர 

வாயிலில் 4 படிகள் உள்ளது. இவை நான்கு வேதங்களை குறிக்கிறது. அதன் 

பின் பலிபீடத்தை வணங்கி ஐந்து படிகளை கடக்க வேண்டும். இவை 

பஞ்சபூதங்களை குறிக்கிறது. பிறகு சுவாமியை தரிசிக்க இரண்டு வழிகள் 

உள்ளது. முதல் வழி "தட்சிணாயணம்' ஆடி முதல் மார்கழி வரை 

திறந்திருக்கும். இரண்டாவது வழி "உத்தராயணம்' தை முதல் ஆனி வரை 

திறந்திருக்கும். இங்கு பலிபீடமே மிகவும் சிறப்பு. பலிபீடத்தின் முன் தங்கள் 

கோரிக்கை நிறைவேற வேண்டிக்கொண்டு, நிறைவேறிய பின் "பலிபீட 

திருமஞ்சனம்' செய்து பொங்கல் படையல் செய்து பிரார்த்தனையை 

நிறைவேற்றுவார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கார்த்திகை 

ஞாயிற்றுக்கிழமைகளில் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி,பெருமாளுக்கு அமுது 

செய்த பொங்கலை சாப்பிட்டால் "புத்ரபாக்கியம்' நிச்சயம் என்பது ஐதீகம். 

இத்தல பெருமாள் கிழக்கு பார்த்த நின்ற திருக்கோலத்தில் உள்ளார். இவருக்கு 

மேல் உள்ள விமானம் விமலாக்ருத விமானம் எனப்படும். இவரை கருடன், 

சிபி, மார்க்கண்டேயர், பிரம்மா, சிவன் ஆகியோர் தரிசனம் செய்துள்னர்.

முகவரி:

அருள்மிகு புண்டரீகாட்சன் (தாமரைக்கண்ணன்) திருக்கோயில், திருவெள்ளறை-621 009 திருச்சி மாவட்டம்.



Sunday 24 November 2013

64 சிவ வடிவங்கள்(22. அர்த்த நாரீஸ்வர மூர்த்தி)

22. அர்த்த நாரீஸ்வர மூர்த்தி









திருக்கைலையில் சிவபெருமானை தரிசிக்க திருமால், நான்முகன், இந்திரன் 

என அனைத்தும் தேவருலகத்தினரும் திரண்டிருந்தனர். அவர்களை 

வரிசைப்படி நந்தி தேவர் அனுப்பிக் கொண்டிருந்தார்.  அனைவரும் பார்வதி 

தேவியையும், சிவபெருமானையும் தனித்தனியாக வணங்கி வேண்டும் 

வரங்களைப் பெற்றுச் சென்றனர்.  பின்னர் வந்த முனிகுமாரர்களில்

  ஒருவரான பிருங்கி முனிவர் பார்வதி தேவியை சட்டைச் செய்யாமல்   சிவபெருமானை 

மட்டுமே வணங்கிய படிச் சென்றார். இதனைக் கண்ணுற்ற பார்வதிதேவி 

 அவரது உடலிலுள்ள சதையை  தனது மூச்சுக் காற்றால்   இழுத்துக் கொண்டார்.  இதனையும் சட்டை செய்யாத பிருங்கி முனிவர் எழும்பும் 

தோலுமாகவே சிவபெருமானை துதித்தார். சிவபெருமான் தன்னை மட்டும் 

வணங்கியதால்  பார்வதிதேவியின் திருவிளையாடல் என்பதை புரிந்து மேலும் 
ஒரு காலை முனிவருக்கு வழங்கினார். முனிவர் அகன்றவுடன் பார்வதி தேவி 

தான் தவமியற்றப் போவதாகக் கூறி கைலாயத்தை விட்டு நீங்கி வினாயகன், 

முருகன், சப்த மாதர்கள் படைசூழ ஒரு மலைச்சாரலில் உறுதியான தூண் மீது 

நின்றவாறு தவம் இயற்றினார். கடுமையான உறுதியான தவத்தால் மகிழ்ந்த 

சிவபெருமான் தனது படைபரிவாரங்களுடன் தேவி தவமியற்றும் இடத்திற்கு 

வந்தார்.  உடன் அவர் தேவி  உனக்கு என்ன வேண்டும் கேள் என்றார். உடன் 

தேவி இறைவா   நான் தனியாகவும் நீங்கள் தனியாகவும் இருப்பதால் தானே 

இந்தப் பிரச்சனை. எனவே தங்களது இடபாகமாக  நானிருக்கும்படியான 

வரத்தைத் தாருங்கள் என்றார்.

     சிவபெருமானும் அவ்வாறே தந்து தனது இடப்பாகத்தில் தேவியை ஏந்தினார். 

வலப்பக்கம் சிவனுமாக, இடப்பக்கம் பார்வதியாக உள்ள திருக்கோலமே அர்த்த 

நாரீஸ்வர மூர்த்தி யாகும்.


 

அவரை தரிசிக்க நாம் செல்ல வேண்டிய தலம் திருக்கோடாகும். ஈரோடு 

 அருகேயுள்ள இத்தலம்  சிவபெருமானுடையது என்றாலும் இளைய 

பிள்ளையாரான முருகனுக்கு உகந்தது ஆகும். இங்குள்ள இறைவன் பெயர் 

 அர்த்த நாரீஸ்வரர், இறைவி பெயர் பாகம்பிரியாள் என்பதாகும்.  ஆணாகவும்

, பெண்ணாகவும் இங்குள்ள இறைவன் காட்சியளிக்கிறார். கணவன் - மணைவி 

இருவரும் ஒருவர்க்கு ஒருவர் விட்டுக்  கொடுத்து வாழவும், குடும்பத்தில் 

ஒற்றுமை, அமைதி நிலவவும் இந்த மூர்த்தியை வணங்கினால்  கைகூடும்

. வில்வ, தும்பை, கொன்றை மலர் அர்ச்சனையும், சர்க்கரைப் பொங்கல் 

(அல்லது) நெய்யன்ன நைவேத்தியமும், திங்கள், பிரதோஷ, பௌர்ணமி 

தினங்களில் கொடுக்க பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர் என்பது ஐதீகம். மேலும் 

இங்குள்ள சிவபெருமானுக்கு  பசும்பால்  அபிசேகம் செய்தால்  குடும்பம் 

ஒற்றுமையுடன் காணப்படும்.  




   

Wednesday 20 November 2013

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்...?

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்...?


அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு பேறுகளுக்கும் அடிப்படை இல்வாழ்க்கையாகும். `இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஏதுமில்லை' என்ற வழக்கு குடும்ப வாழ்வின் அடிப்படைத் தத்துவத்தைக் கூறுகிறது. திருமணம் என்ற வாயிலின் வழியாக அமையும் குடும்ப வாழ்வென்ற பயணம் தற்காலத்தில் போக்குவரத்துச் சிக்கல் போல் அமைந்துவிட்டது. 
அது சந்திக்கும் பலவகை சிக்கல்களில் ஜாதக ரீதியானவை மிக முக்கியத்துவம் பெறுகின்றன. அதிலும் செவ்வாய் தோஷம் என்ற சொல் பெற்றோர்களின் காதில், காய்ச்சிய ஈயம் போல் பாய்கிறது. செவ்வாய் தோஷமென்பது பொதுவாக ஒரு ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால், தோஷம் எனப்படுகிறது. அது எவ்வளவு என்பதில் பல வகைக் கணக்கீடுகள் உள்ளன. 

அவை யாவும் செவ்வாய் என்ற கிரகத்தின் நிலையை அது கடக்கும் ராசிகளின் சுப-அசுபத் தன்மைகளால் நிர்ணயம் செய்யப்படுகின்றன. லக்னத்திலிருந்து கணக்கீடு செய்வது போல் ராசி எனப்படும் சந்திரா லக்னத்திலிருந்தும், சுக்ரன் இருக்கும் வீட்டிலிருந்தும் செவ்வாயின் நிலையைக் கணக்கீடு செய்வதும் செவ்வாயின் தோஷ அளவுகளைக் காண உதவுகிறது. 

செவ்வாயை ஜோதிடம் `மங்கள காரகன்' என்று குறிப்பிடுகிறது. மேலும் நமது மனித உடல் இயக்கத்தில் ரத்த ஓட்டத்தைக் குறிப்பிடும் கிரகம் செவ்வாயாகும். அறிவியல் ரீதியாகப் பார்ப்பதென்றால் செவ்வாய் வேறு கிரகச் சேர்க்கையின்றி லக்னத்திற்கு 2-4-7-8-12 ஆகிய இடங்களில் இருப்பவர்களது ரத்த குரூப் `ஓ' வகையில் அமைவது இயல்பாகும். 

அதிலும் வக்ர கதி பெற்றிருந்தால் அது `ஓ நெகட்டிவ்' ஆக அமைகிறது.ரத்தம் என்ற சொல், சமூக ரீதியாக, உணர்வுகளைக் குறிப்பிடக்கூடியது. இரு மணம் இணையும் திருமணத்திற்கு உணர்வுகளின் ஒருமை நிலை முக்கியமான அம்சமல்லவா? அதிலும் செவ்வாயின் தோஷ நிலைகளை ஆய்வு செய்து மணமக்களை திருமண வாழ்வில் இணைத்து வைப்பதால் பல சிக்கல்களைத் தவிர்த்து விடலாம். 

ராசி மண்டலத்தின் 12 வீடுகளிலும் செவ்வாய் ஆட்சி, உச்சம், நட்பு, சமம், பகை, நீசம் என்ற பல நிலைகளை அடைவதன் மூலம் தோஷத்தை உண்டாக்கினாலும் பிற கிரகங்களின் சேர்க்கை, பார்வை, முதலிய காரணிகளால் தோஷ நிவர்த்தியும் அடைகிறது. ஒருவரது லக்னத்திலிருந்து 2-ம் இடம் குடும்ப ஸ்தானம் ஆகும். மேலும் வாக்கு ஸ்தானமும் ஆகும். 

அந்த முக்கியமான இடத்தில் நெருப்புக் கோளான செவ்வாய் இருப்பது இல்லற வாழ்வில் முரண்பட்ட விளைவுகளை மற்ற காரணிகளின் தாக்கங்களுக்கு ஏற்ப உண்டாக்கும். 4-ம் இட செவ்வாய் உடல் நிலையில் தனது ராசியின் நிலைக்கேற்ப பாதிப்புகளை உண்டாக்கக் கூடியது, அது சுக ஸ்தானம் என்பதால் ஆரோக்கியம் பற்றிய கவலைகளை உண்டாக்கும். 7-ம் இடம் என்பது களத்திர ஸ்தானம். 

கணவரானால் மனைவியையும், மனைவியானால் கணவரையும் குறிப்பிடக்கூடியது. உணர்வுகளைத் தட்டி எழுப்பும் கிரகமான செவ்வாய் அதிலிருப்பது உணர்வுகளின் சமநிலையைப் பாதிக்கக் கூடியதாகும். 8-ம் இடம் ஆயுள் ஸ்தானம். ஒருவரது ஆரோக்கியத்தைப் பாதிக்கும் விஷயங்களைக் குறிப்பிடுவது. 


அதில் செவ்வாய் இருப்பது அறுவை சிகிச்சை, விபத்து முதலிய விஷயங்களைக் குறிப்பிடுவதாகும். 12-ம் இடம் விரய ஸ்தானம் எனப்படும். அதில் செவ்வாயின் நிலை கட்டுப்பாடற்ற செலவினங் களையும், சக்தி நிலைகளில் தவிர்க்க இயலாத விரயங்களையும் குறிப்பிடுவதாகும். செவ்வாய் தோஷப்பரிகாரமாக அது நிற்கும் ராசியில் முதல் திரேக்காணத்தில் இருந்தால் தேவி வழிபாட்டாலும், இரண்டாம் திரேக்காணத்திலிருந்தால் சுப்ரமணியர் வழிபாட்டாலும், மூன்றாம் திரேக்காணத்திலிருந்தால் பிரத்யங்கிரா, நரசிம்மர் போன்ற கடவுள் வழிபாடுகளாலும் செவ்வாயின் மங்களகாரக தத்துவத்தை வெளிப்படுத்தி நலம் பல நிரம்பிய வாழ்வுதனைப் பெறலாம். 

12 ஜோதிர் லிங்கம்(3.அருள்மிகு குஷ்மேஸ்வரர் (கிருஷ்ணேஸ்வரர்) திருக்கோயில்)

3.அருள்மிகு குஷ்மேஸ்வரர் (கிருஷ்ணேஸ்வரர்) திருக்கோயில்




முன்னொரு காலத்தில் இத்தலம் ஒரு சிறுகிராமமாக இருந்தது. 

அக்கிராமத்தில் சுதர்மன் என்ற பிராமணன் வாழ்ந்து வந்தார். அவரது 

மனைவியின் பெயர் சுதேஹா என்பதாகும். இருவரும் இனிதே இல்லறம் 

நடத்திவந்தனர். நீண்ட நாட்களாக அவர்களுக்குக் குழந்தைப் பேறு 

இல்லாமையினால் சுதேஹா மிகவும் மனம் வருந்தினாள். எனவே தனது 

வருத்தம் நீங்கத் தன் தங்கை கிருஷ்ணை என்பவளைத் தனது கணவனுக்கு 

இரண்டாம் மனைவியாகத் திருமணம் செய்து வைத்தாள். கிருஷ்ணை மிகுந்த 

சிவபக்தி கொண்டவள். தினமும் 108 சிவலிங்கங்களைக் களிமண்ணால் செய்து

 சிவவழிபாடு செய்து, அந்த சிவலிங்கங்களைச் சிவாலய ஏரியில் போட்டு 

விடுவாள். சிவ பெருமான் அருளால் கிருஷ்ணைக்கு ஓர் ஆண் குழந்தை 

பிறந்தது. யாவரும் மகிழ்ந்து அக்குழந்தையை அன்புடன் கவனமாக வளர்த்து 

வந்தனர். அதுவரை சலனமின்றி இருந்த சுதேஹைக்கு இப்போது 

பொறாமையும், தனக்கு மதிப்புக் குறைந்துவிட்டது என்ற தாழ்வு 

மனப்பான்மையும் ஏற்பட்டு விட்டது. அதனால் பெரிதும் மனம் புழுங்கினாள். 

இவ்வளவுக்கும் காரணம் கிருஷ்ணையின் மகன்தான் என எண்ணி, அம்மகன் 

தூங்கும் போது கொன்று, உடலைச் சாக்கில் கட்டி சிவாலய ஏரியில் போட்டு 

விட்டாள். இதை அறிந்த கிருஷ்ணை கலங்காமல் சிவபெருமான் தன் 

மகனைக்காப்பாற்றுவார் எனத்திடமான நம்பிக்கைகொண்டு, அன்றும் 108 

சிவலிங்கங்கள் செய்து சிவலிங்கப்பூசையில் ஈடுபட்டாள். சிவ பெருமானிடம் 

அழுதுமுறையிட்டு தன் மகனைக் காக்க வேண்டினாள். வழக்கம் போல் 

லிங்கங்களைக் சிவாலய ஏரியிலிட்டாள். என்ன ஆச்சரியம்! அவளது மகன் 

மிகவும் பிரகாசமான ஒளியுடன் ஏரியின் நீரிலிருந்து எழுந்து வந்தான். 

சிவபெருமான் கிருஷ்ணைக்குக் காட்சி தந்து ஆசீர்வதித்தார். கிருஷ்ணையின் 

வேண்டுதலின்படி சிவபெருமான் இங்கேயே கோயில் கொண்டு மக்களைக் 

காப்பதாக வரமளித்தார். அதன்படியே இங்கே சிவன் கோயில் உண்டாகியது.

 அக்கோயிலுக்கு கிருஷ்ணேசுவரம் என்னும், சிவலிங்கத்திற்குக் 

கிருஷ்ணேசுவரர் என்றும் பெயர் வழங்கலாயிற்று. 


குங்குமணேசுவரம் மகாராட்டிராவிலுள்ள ஐந்து ஜோதிர்லிங்கத் தலங்களில் 

ஒன்று. சிவலிங்கமும், கோயிலும் சிவப்பாகக் காணப்படுகிறது. சிற்பக் கலை 

நுணுக்கம் வாய்ந்த கோயில். பார்வதி தேவியால் ஜோதிர் லிங்கம் ஆக்கப்பட்ட 

தலம். இத்தலத்திற்கு ஒருமுறை வந்து வழிபட்டுச் சென்றால் மறுபிறவி 

என்பதே கிடையாதாம். சிவாலயத் தீர்த்தத்தில் நீராடியவர்கள் சுவர்க்கம் 

புகுவார்கள். மகா சிவராத்திரி அன்று இத்தீர்த்தமாடி ஈசனை வழிபட்டவர் 

மோட்சம் அடைவார்களாம். உலகப் புகழ் பெற்ற எல்லோராக் குகைக்கோயில் 

ஒரு கிலோ மீட்டருக்கு அருகே உள்ளதால், எல்லோரா தரிசிக்க 

வரக்கூடியவர்கள் இங்கே வந்து சாமி தரிசனம் செய்து விட்டுப் போகிறார்

கள். குங்குமணேசுவரம் சமவெளிப்பிரதேசத்தில் உள்ளதலம். கடற்கரை 

ஏதுமற்ற மத்தியப் பகுதியில் உள்ளதலம். போவதற்கு எந்தவிதத் தடங்கலும் 

அற்ற தலம். எனவே பக்தர்கள் சவுகரியத்தை ஒட்டியும் தலத்தில் அதிகமழை

 வெப்பகாலம் தவிர்த்தும் ஆண்டு முழுதும் எப்போது வேண்டுமானாலும் 

யாத்திரை மேற்கொள்ளலாம்.

பார்வதி தேவியானவர் சிவ பெருமானை நோக்கி இங்கு ஒரு சமயம் தவம் 

செய்து கொண்டிருந்தார். அம்பிகை இங்குள்ள ஏலா என்னும் நதியில் நீராடி, 

சிவபெருமானை வழிபட்டு வந்தார். பார்வதி தேவியார் குங்குமம் கொண்டு 

சிவலிங்கத்தை அர்ச்சனை செய்து வந்தார். சிவலிங்கம் குங்குமம் போன்று

 சிவந்து காணப்பட்டது. குங்குமேசுவரர் எனப்பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் 

ஒரு ஜோதிர்லிங்கம் தாபிக்க சிவனும் பார்வதியும் திருவுளம் கொண்டனர். 

ஒருநாள் பார்வதி தேவியார் ஏலாநதியில் நீராடி, மாற்றாடை அணிந்து 

சிவபூசையில் அமர்ந்தார். பார்வதி தேவியார் தமது இடது உள்ளங் கையில் 

சிறிது குங்குமத்தை வைத்து வலது கை ஆள்காட்டி விரலால் ஓம் நம சிவாய 

எனக் கூறித் தேய்த்தார். அப்போது அவரது கையில் மிகவும் பிரகாசமான 

ஜோதி தோன்றியது. அப்போது ஈசனும் பார்வதி தேவி வழிபட ஒரு 

ஜோதிர்லிங்கம் படைப்பதற்காக இந்த ஜோதி தோன்றியது என அசரீரியாகக் 

கூறினார். பார்வதி தேவியின் கையினின்றும் தோன்றிய ஜோதியானது, 

பார்வதி தேவி வழிபட்ட சிவலிங்கத்தில் ஐக்கியமாகியது. அப்போது 

சிவலிங்கம் மிகவும் பிரகாசமான ஜோதிர்லிங்கமாகப் பிரகாசித்தது. மேலும் 

குங்குமம் போன்று சிவப்பாகவும் ஜொலித்தது. பார்வதி தேவியும் மிகுந்த 

பக்தியுடன் வணங்க, சிவபெருமான் நேரில் வந்து பார்வதி தேவியைத் 

திருமணம் செய்து கயிலைக்குக் கூட்டிச் சென்றார். இவ்விதமாக

 இங்கு ஜோதிர் லிங்கம் தோன்றியது. மக்களும் பக்தியுடன் இன்றும் வழிபட்டு வருகின்றனர். 



Sunday 17 November 2013

64 சிவ வடிவங்கள்(21. கல்யாண சுந்தர மூர்த்தி)

 64 .சிவ வடிவங்கள்(21. கல்யாண சுந்தர மூர்த்தி)





திருக்கைலையில்  அனைத்து  தேவர்குழாமுடன்  சிவபெருமான் 

 வீற்றிருக்கையில்  பார்வதி  தேவியார் எழுந்து இறைமுன்  சென்று  தக்கன் 

 மகளால்  தாட்சாயிணி  என்ற பெயர்  பெற்றேன். அந்த அவப்பெயரை மாற்ற 

தங்கள் தயவு வேண்டும் என்றார்.  உடன்  சிவபெருமானும்  பார்வதி பர்வத 

மன்னன்  உன்னை  மகளாக அடைய  தவம்  இயற்றுகிறான். நீ அவரிடம் 

 குழந்தையாக  பிறப்பாயாக. பிறகு உன்னை நான் மணமுடிப்பேன் என்றார். 

அதன்படி பர்வத மன்னரிடம் மூன்று  வயதுள்ள குழந்தையாக  வந்து சேர்ந்தார். 

அக்குழந்தையை  அவர்கள் சீராட்டி  வளர்த்தனர். பார்வதிதேவி   அருகில் 

இல்லாததால்  சிவபெருமான்  யோகத்தில்  இருந்தார். அதனால் உலக இயக்கம் 

ஸ்தம்பித்தது. உடன் தேவர்களின்  ஆலோசனைப்படி  மன்மதன் 

 சிவபெருமானின் யோகத்தைக் கலைக்க  பாணம் விட்டார். இதனால் 

கோபமுற்ற  சிவபெருமான்  அவரை நெற்றிக் கண்ணால் எரித்தார். இதனால் 

கவலையுற்ற  ரதி சிவனிடம்  சரணடைந்தார். அவரும் பொருத்திருக்கச் 

சொன்னார்.

இதற்கிடையே பர்வத ராஜனிடம் வளரும் பார்வதிதேவி சிவனை மணாளனாக

  அடைய வேண்டித் தவமிருந்தார். பார்வதி முன் அந்தணராகத்      தோன்றி 

 தன்னை மணம் புரியும் படி வேண்டினார். பார்வதி அதை மறுத்து 

 சிவபெருமானை  மணம் செய்யவே தான் தவமிருப்பதாகக் கூறினார்.

 உடன் அந்தண வேடம் கலைந்து இடபத்துடன் சிவபெருமான் 

காட்சிக்கொடுத்தார். விரைவில்  வந்து மணம் புரிவேன் என்று கூறி 

மறைந்தார்.  பார்வதி தேவி தன் தந்தையிடம் நடந்தவற்றைக் கூறினார். 

அங்கே சிவபெருமான் சப்தரிஷிகளிடம்  தனக்கு மலையரசன் மகளை மணம்

 பேசச் சொன்னார்.  இருவீட்டாரும் பேசி திருமணத்திற்கு நாள் குறித்தனர். 

பங்குனி உத்திர தினம் மணநாளாக குறிக்கப்பட்டது. தேவருலகத்தினர் 

படைசூழ சிவபெருமான் பர்வதம் விரைந்தார். அனைவரும் அங்கே 

குவிந்ததால் வடதிசை தாழ்ந்தது. உடன் சிவபெருமான்  அகத்திய முனிவரை 

தென்திசை சென்று நிற்கும் படி வேண்டினார். அவர் தயங்கவும் உமக்கு எம் 

திருமணக்கோலத்தை காட்டுவோம் எனவே தென்திசை செல்க என்று 

பணிந்தார். அகத்தியரும் அவ்வாறு சென்றார். உடன் இருவருக்கும் திருமண

ம் நடைபெற்றது. அப்பொழுது ரதி தனது கணவனை உயிர்ப்பிக்க வேண்டினார்.

சிவபெருமானும் அவ்வாறே மன்மதனை உயிர்ப்பித்தார். பின் ரதியின் 

கண்களுக்கு மட்டும் உருவத்துடனும், மற்றொர்க்கு அருபமாகவும் 

 காட்சியளிக்கும் படி வேண்டினார். பின் அவரவர், அவரவர் இருப்பிடம் 

திரும்பினர்.

பார்வதி தேவியை திருமணம் செய்ய சிவபெருமான் எடுத்த கோலமே  கல்யாண சுந்தர மூர்த்தியாகும்.  அவரை தரிசிக்க தாம் செல்ல வேண்டிய தலம் திருவாரூர் அருகேயுள்ள திருவீழிமலையாகும். இங்கு மூலவர் பெயர்  விழியழகர், இறைவி பெயர்  சுந்தர குஜாம்பிகை யாகும். இங்கு உற்சவ மூர்த்தியாக  கல்யாண சுந்தரர் காட்சியளிக்கிறார்.  இங்குள்ள கல்யாண சுந்தரருக்கு அர்ச்சனை செய்த  மாங்கல்யத்தை தானமாகப் பெற, கொடுக்க திருமணம் தங்குதடையின்றி  நடைபெறும்.  மேலும் பிரதோஷ தரிசனமும் சிறப்பானதாகும். மல்லிகைப்பூ  அர்ச்சனையும், சர்க்ககரைப் பொங்கல் நைவேத்தியமும்  திங்கள், குருவாரங்களில் கொடுக்க திருமணத்தடை விலகும். கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும். மேலுமொரு சிறப்பாக கல்யாண சுந்தரருக்கு ரோஜாமாலை அணிவித்துப் பூச்செண்டு கொடுத்தால் கல்யாணம் இளம்பெண்களுக்கு கூடி வரும்.  இங்குள்ள மூலவரின் பின் புறம் சிவபெருமான்  உமை திருமணக்கோலம் உள்ளது.


Friday 15 November 2013

3.அருள்மிகு உத்தமர் திருக்கோயில்( 108 திவ்ய தேசங்கள்)

3.அருள்மிகு உத்தமர் திருக்கோயில்( 108 திவ்ய தேசங்கள்)


மூலவர் : புருஷோத்தமன்

                                  அம்மன்/தாயார் : பூர்ணவல்லி, அம்பாள்: சவுந்தர்ய பார்வதி

  தல விருட்சம் : கதலி (வாழை)மரம்

  தீர்த்தம் : கதம்ப தீர்த்தம்

  ஆகமம்/பூஜை : வைகானஸம்


  பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

  புராண பெயர் : கதம்பவனம், பிச்சாண்டவர் கோவில், 
திருக்கரம்பனூர்

  ஊர் : உத்தமர் கோவில்

  மாவட்டம் : திருச்சி

  மாநிலம் : தமிழ்நாடு
 


தல வரலாறு:


சிவனைப் போலவே ஐந்து தலைகளுடன் இருந்த பிரம்மாவைக் கண்ட பார்வதிதேவி அவரை தனது கணவன் என நினைத்து பணிவிடை செய்தாள். இதைக்கண்ட சிவன், குழப்பம் வராமல் இருக்க பிரம்மாவின் ஒரு தலையை மட்டும் கிள்ளி எடுத்தார். இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்ததோடு, பிரம்மாவின் கபாளமும் (மண்டை ஓடு) அவரது கையுடன் ஒட்டிக்கொண்டது. சிவன் எவ்வளவோ முயன்றும் அவரால் கபாளத்தை பிரிக்க முடியவில்லை. அவருக்கு படைக்கப்பட்ட உணவுகள் அனைத்தையும் கபாளமே எடுத்துக் கொண்டது. எவ்வளவு உணவு இட்டாலும் கபாளம் மட்டும் நிறையவேயில்லை. பசியில் வாடிய சிவன், அதனை பிச்சைப்பாத்திரமாக ஏந்திக்கொண்டு பிட்சாடனார் வேடத்தில் பூலோகம் வந்து பல தலங்களுக்கும் சென்றார். அவர் இத்தலத்திற்கு வந்தபோது பெருமாள், சிவனின் பாத்திரத்தில் பிச்சையிடும்படி மகாலட்சுமியிடம் கூறினார். அவளும் கபாளத்தில் பிச்சையிடவே அது பூரணமாக நிரம்பி சிவனின் பசி நீக்கியது. இதனால் தாயார் "பூரணவல்லி' என்ற பெயரும் பெற்றாள்.மகாவிஷ்ணுவும் பள்ளிகொண்ட கோலத்தில் சிவனுக்கு காட்சி தந்தார்.



 தலபெருமை:



பிரம்மன் சன்னதி: படைக்கும் தொழிலைச் செய்யும் பிரம்மாவிற்கு பூலோகத்தில் தனக்கென தனியே கோயில் இல்லையே என மனக்குறை இருந்தது. எனவே, மகாவிஷ்ணு அவரை பூலோகத்தில் பிறக்கும்படி செய்தார். பிரம்மா இத்தலத்தில் பெருமாளை வணங்கி தவம் செய்து வந்தார். அவரது பக்தியை சோதிப்பதற்காக மகாவிஷ்ணு, கதம்ப மரத்தின் வடிவில் நின்று கொண்டார். இதையறிந்த பிரம்மா கதம்ப மரத்திற்கு பூஜைகள் செய்து, சுவாமியை வணங்கினார். அவரது பக்தியில் மகிழ்ந்த மகாவிஷ்ணு காட்சி தந்து, "நீ எப்போதும் இங்கேயே இருந்து என்னை வழிபட்டு வா. நீ பெற்ற சாபத்தால் உனக்கு கோயில்கள் இல்லாவிட்டாலும் இங்கு தனியே வழிபாடு இருக்கும்' என்றார். பிரம்மாவும் இங்கேயே தங்கினார். பிற்காலத்தில் இவருக்கும் சன்னதி கட்டப்பட்டது.




பிரம்மாவுக்கு இடப்புறத்தில் ஞான சரஸ்வதி தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். இவள் கைகளில் வீணை இல்லாமல் ஓலைச்சுவடி, ஜெபமாலையுடன் காட்சி தருவது சிறப்பு. பிரம்மாவிற்கு தயிர்சாதம், ஆத்தி இலை படைத்தும், சரஸ்வதிக்கு வெள்ளை வஸ்திரம், தாமரை மலர் மாலை சாத்தியும் வழிபட்டால் ஆயுள் கூடும், கல்வி சிறக்கும் என்பது நம்பிக்கை. குருப்பெயர்ச்சியின்போது பிரம்மாவிற்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது.


மும்மூர்த்திகள் தலம்: விஷ்ணு கிழக்கு பார்த்தபடி பள்ளி கொண்ட கோலத்திலும், உற்சவர் பிரயோக சக்கரத்துடன் நின்ற கோலத்திலும் உத்யோக விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.  பூரணவல்லி தாயார் தனிச்சன்னதியில் அருளுகிறாள். இவள் என்றும் உணவிற்கு பஞ்சமில்லா நிலையைத் தரக்கூடியவள். அருகில் மகாலட்சுமிக்கும் தனிச்சன்னதி இருக்கிறது. இவ்விரண்டு தாயார்களது தரிசனம் விசேஷ பலன்களைத் தரக்கூடியது. பெருமாளுக்கு நேர் பின்புறத்தில் சிவன் மேற்கு பார்த்தபடி லிங்க வடிவில் இருக்கிறார். இவர் பிட்சாடனாராக கோஷ்டத்திலும், உற்சவராகவும் இருக்கிறார். சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் தனித்தனி சன்னதிகளில் அம்பாள்களுடன் காட்சி தருகின்றனர். ஒரே தலத்தில் மும்மூர்த்திகளையும் தரிசனம் செய்வது அபூர்வம். கார்த்திகை தீபத்திருவிழாவின்போது மூவருக்கும் மூன்று திசைகளில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டு ஒன்றாக உலா வருகின்றனர். தைப்பூசத் திருவிழாவில் சிவனுக்கும், மாசி மகத்தில் பெருமாளுக்கும் கொள்ளிடத்தில் தீர்த்தவாரி விழா நடக்கிறது.  

                                               


சிவகுரு தெட்சிணாமூர்த்தி, விஷ்ணு குரு வரதராஜர், குரு பிரம்மா, சக்திகுரு சவுந்தர்ய பார்வதி, ஞானகுரு சுப்பிரமணியர், தேவகுரு வியாழன், அசுரகுரு சுக்ராச்சாரியார் ஆகிய ஏழு குரு சுவாமிகளும் குருவிற்குரிய இடங்களில் இருந்து அருளுகின்றனர். குருப்பெயர்ச்சியின்போது ஏழு குருக்களுக்கும் விசேஷ அபிஷேகங்கள் நடக்கிறது. எனவே இத்தலம் "சப்தகுரு தலம்' எனப்படுகிறது.


Saturday 9 November 2013

64 சிவவடிவங்கள்(20. திரிபுராந்தக மூர்த்தி)

20. திரிபுராந்தக மூர்த்தி










தாரகாசுரனின் மூன்று மகன்களும் நான்முகனை நோக்கி நெடுங்காலம் 

தவமியற்றி வந்தனர். நான்முகனும் காட்சிக் கொடுத்தார் உடன் அவர்கள் 

என்றும்  அழியாத வரம் வேண்டும் என்றனர். உடன் நான்முகனோ அது 

முடியாத காரியம்  அனைவரும் அனைவரும் ஒரு நாள் அழிந்தே  தீருவோம். 

 எனவே மோட்சமாவது  கேளுங்கள் கிடைக்கும். இவ்வுலகில் என்றும் 

அழியாமல் இருப்பவர் சிவபெருமான் மட்டுமே என்றார். உடனே அம்மூவரும் 

 அப்படியானால்  பொன், வெள்ளி, இரும்பினால்  ஆன சுவருடைய  முப்புரம் 

வேண்டும். அவை நாங்கள் நினைத்த இடத்திற்கு மாற வேண்டும்.  அவற்றை 


எங்களையும் சிவபெருமான் தவிர வேறொருவர் அழிக்க முடியாத வரத்தை 

கேட்டனர்.  நான்முகனும் கொடுத்து விட்டு மறைந்தார். அம்மூவரும் தங்கள்

 சுயரூபத்தை சிவனிடம் காட்டாமல்  மற்ற அனைவரிடத்திலும்  காட்டினர். 


தேவர்கள் அவர்களது தொல்லை தாளாமல்  திருமாலிடமும், இந்திரனிடமும் 

முறையிட, அவர்கள் அசுரர்களிடம்  தோற்று திரும்பினர். பின்னர் சிவனை 

நோக்கி தவமிருந்தனர். சிவபெருமான் அவர்கள்  தமது அடியார்  எனவேக் 

கொல்ல முடியாது என்றார்.  மீண்டும் கடுமையான தவத்தை  திருமால், 



இந்திரன், நரதர் மேற்க்கொண்டனர்.  உடன் சிவபெருமான்  அப்படியானால் 

 தேர் முதலான பேர் கருவிகளைத் தயார் செய்யும் படி தேவர்களிடம் கூறினார். 


தேவர்களும் அவ்வாறே தயார் செய்தனர்.  தேரில் மந்திர மலையை 

அச்சாகவும்,  சந்திர, சூரியர் சக்கரமாகவும், நதிகள் தேர்க் கொடியாகவும், 

அஷ்டபர்வதங்கள் தேரின் தூண்களாகவும், புண்ணிய நதிகள் சாமரம் வீசவும், 


தேவகணத்தினர் வாத்தியங்கள் இசைத்தப்படி  உடன் வர தேர் தயாரானது. 

சிவபெருமான்  பார்வதியுடன்  இடபவாகணத்தில்  இருந்து தேரில் கால் எடுத்து 

வைத்தவுடன்  தேரின் அச்சு முறிந்தது. உடன் இடபமாக மாறி திருமால் 

தேரைத் தாங்கினார்.  ஆனாலும் தேர் மேலும் சாய அனைவரும் 

 முதற்கடவுளை வேண்ட,  தேர் பழைய படி சரியானது. பின் தேவகணங்கள் 

 படைசூழ, இந்திரன், திருமால், முருகன்,  வினாயகன் என அனைவரும் 

தங்களது வாகனம் ஏறி  முடிவில் அனைவரின்  எண்ணப்படி மேருமலையை வில்லாகக் கொண்டு, வாசுகியை  அம்பாகக் கொண்டு  நாணேற்றினார். பின் 

திடிரென அவற்றை வைத்து விட்டு முப்புறங்களையும்  பார்த்து ஒரு 

புன்னகைப் புரிந்தார்.  முப்புறங்களும்  எரிந்து சாம்பலாயின.


உடன் அசுரர்கள் மூவரும் ( தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி) 

சிவபெருமானிடம் மன்னிப்புப் கேட்க. அவரும்  அவர்களை மன்னித்து துவார 

பாலகராக வைத்துக் கொண்டார். தேவர்களின்  துயர்துடைத்து 

முப்புரங்களையும் எரித்ததால்  சிவபெருமானுக்கு  திரிபு ராந்தக மூர்த்தி 

 என்னும் பெயர் ஏற்பட்டது.  இவரை தரிசிக்க நாம் செல்ல வேணடிய தலம் 

கடலூரில் உள்ள  திருஅதிகையாகும். இங்குள்ள  இறைவன் பெயர் திரிபுராந்தக

 மூர்த்தி, அதிகைநாதர் என்பதும், இறைவி பெயர்  திரிபுரசுந்தரியாகும். இவர்க்கு 

கெடில  நதியால்     அபிசேகமும்  வில்வார்ச்சனையும் செய்ய பகைவர் பகை 

ஒழிந்து  நண்பராவார்கள். சூலை நோய் இருப்பின்  இந்த  சுவாமியை  வழிபட 

 நோய் குறைந்து  உடல் நலம் சீராகும். மேலும் இங்குள்ள  சிவபெருமானுக்கு

  திருமஞ்சனத்தூள்  அபிசேகம்  செய்ய  எவ்வகை  நோயும் குணமடையும் 

என்பது  ஐதீகம்.



Sunday 3 November 2013

64 சிவவடிவங்கள்(19. கங்கா விசர்ஜன மூர்த்தி)

19. கங்கா விசர்ஜன மூர்த்தி




சகரன் எனும் அரசன் அயோத்தி நகரை ஆண்டுவந்தான். அவன் அஸ்வமேத யாகம் செய்ய ஒரு  குதிரையைக் கொணர்ந்தான். அக்குதிரை  இருந்தால்  தானே யாகம் நடைபெறும் அதைத் தடுக்க வேண்டி குதிரையை பாதாளத்தில் கபில முனிவர் அருகே கட்டி வைத்தான்.  அயோத்தி மன்னன் குதிரையைத்தேடி கொண்டுவரும் படி தமது அறுபதினாயிரம் மக்களையும் பணிந்தார். பாதாளத்தில் முனிவர் அருகே குதிரைக் கண்ட அவர்கள்  முனிவரே  கள்வன் என முடிவு கட்டினர். உடன் முனிவர்  கண்விழிக்க, அனைவரும் சாம்பலானாகள். இச் செய்தி கேள்விப்பட்ட மன்னன் தன் மகன் அஞ்சுமானை அனுப்பினார். அஞ்சுமானும் கபிலரிடம் சென்று உண்மையைக் கூறி குதிரையை மீட்டு தன் தந்தையின் யாகம் நிøவேற உதவினான்.  அவனது வம்சாவளியிலே வந்தவனே பகிரதன் ஆவான். அவன் தனது முன்னோர்க்கு ஏற்பட்ட நிலையை எண்ணி நான்முகனை நோக்கி தவமிருந்தான். நான்முகன் தோன்றி கங்கையால் உன் முன்னோர்கள்  மோட்சமடைவர் எவனே  சிவனை நோக்கி தவமிக்க சொல்லி மறைந்தார். சிவனை நோக்கி தவமிருந்தான் பகிரதன்.

சிவபெருமான் கேட்ட வரம் கொடுத்தார். பின் கங்கையை நோக்கி தவமிருந்தான். கங்கையோ தன்னை அடக்க சிவபெருமானால் மட்டுமே முடியும் எனவே மறுபடியும் சிவனை நோக்கி தவமியற்றும் படி கூறினார். மறுபடியும் சிவன் கேட்ட வரம் கொடுத்தார், உடன் கங்கை வந்தார். சிவபெருமான் அவரை  அடக்கும் பொருட்டு தனது தலை முடியில்  அணிந்தார். இதனையறியா பகிரதன் பதறினார்.  பின் சிவபெருமான் தன் தலை முடியில் இருந்த கங்கையில் இருந்து சிலதுளிகள் பகிரதன் கைகளில் விட்டார். அந்த சில துளிகளும்  வேகத்துடன் வந்து ஐந்து முனிவர்கள் இயற்றிய யாகத்தை அழித்தது, அதனால் அம்முனிவர்கள்  கங்கையை தம் உள்ளங்கையில் வாங்கி உட்கொண்டனர்.  பகிரதன் கங்கையைக் காணாது திகைத்தான். பின் முனிவர்களை வணங்கி நடந்ததைச் சொல்லி கங்கையைத் திருப்பிதர வேண்டினான். அம்முனிவர்களும் இசைந்து தம் செவி வழியாக விட்டனர். அதனால் கங்கைக்கு ஜானவி என்ற பெயர் ஏற்பட்டது. பகிரதன்  கங்கையை  தம் முன்னோர்களின் சாம்பல் மீது தெளிக்க  அவர்கள் சொர்க்கம் அடைந்தனர்.

பகிரதன் கொண்டு வந்ததால் கங்கைக்கு பகீரதி என்ற பெயர் ஏற்பட்டது. கங்கையை தனது சடையில் ஏற்று வழிபாட்டிற்கே சிறு துளி  கொடுத்து வழி காட்டியதால் சிவபெருமானுக்கு  கங்கா விசர்ஜன மூர்த்தி  என்ற பெயர்  ஏற்பட்டது.  அவரை தரிசிக்க கேதார் நாத் செல்ல வேண்டும். ஆறு மாத காலம் கோயிலில்  வழிபாடுகள் நடைபெறும்.   பனிமழையால்  ஆறுமாதம் மூடப்பட்டிருக்கும்.  உமை  சிவனிடம் இடபாகம் பெற்ற தலமே  கோதார்நாத்  ஆகும்.  இங்கு கோயில் கொண்டுள்ள கோதாரேஸ்வரரை வணங்கி  அங்குள்ள  புனித நீரை வீட்டில் நடைபெறும்  சுபகாரியங்களுக்கு   பயன்படுத்தினால்  சுபமாகும். வெண்தாமரை  அர்ச்சனையும்,  எள்ளோதரை நைவேத்தியமும்  அமாவாசை, திங்கள் கிழமைகளில்  செய்தோமானால்  பிதுர் தோஷம்  சரியாகும். அவர்கள் சொர்க்கம் செல்வர்.  மேலும் இங்கிருந்து கொண்டு செல்லும் நீரை வெள்ளிக்கலசத்தில்  வைத்து பூஜிக்க குபேர சம்பத்து கிட்டும் என்பது ஐதீகம்.