Tuesday 10 September 2013

அருள்மிகு லட்சுமி நரசிம்ம நவநீதகிருஷ்ணன் திருக்கோயில்




மூலவர் :லட்சுமி நரசிம்மர்

         பழமை :500 வருடங்களுக்குள்

ஊர் : நங்கநல்லூர்

 மாவட்டம் : சென்னை

 மாநிலம் : தமிழ்நாடு




தல சிறப்பு:

         ஐந்து தலை நாகத்தின் மீது அமர்ந்தபடி யோக நரசிம்மர் அருள்பாலிப்பது சிறப்பு.

திறக்கும் நேரம்:


         காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

பிரார்த்தனை:

         இங்குள்ள பிரார்த்தனை சக்கரத்தின் மீது பக்தர்கள் கைகளை வைத்து வணங்கி நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை.

தல வரலாறு:

            பரசுராமரின் தந்தையான ஜமதக்னி முனிவருக்கு ஒரு ஆசை ஏற்பட்டது, அது பிரகலாதனுக்காக தூணைப்பிளந்து கொண்டு வந்த நரசிம்மரை தரிசிக்கவேண்டும் என்பதுதான். அதற்காக யாகம் நடத்தினார். யாகத்தீயின் நடுவே உக்கிர கோலத்தோடு தோன்றினார் நரசிம்மர். அவரைக் கண்டு பரவசப்பட்ட ஜமதக்னி, சாந்தமாக இருக்கும்படியும், தான் பெற்ற தரிசனம் மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டுமென வரம் கேட்டார். பெருமாளும் லட்சுமியைத் தாங்கி லட்சுமி நரசிம்மராய் புன்னகை சிந்த அத்தலத்தில் எழுந்தருளினார். நங்கையாகிய லட்சுமி தோன்றிய இடம் நங்கைநல்லூராகி, நங்கநல்லூர் என திரிந்தது.



No comments:

Post a Comment