Sunday 15 September 2013

சனி தோஷம் போக்கும் புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் வழிபாடு

சனி தோஷம் போக்கும் புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் வழிபாடு


சூரியன் ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு ராசியில் சஞ்சாரம் செய்வார். குறிப்பாக புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி ராசியில் சஞ்சாரம் செய்கிறார். கன்னி ராசியின் அதிபதியான புதனின் அதிதேவதை விஷ்ணு. எனவே மகாவிஷ்ணுவை புரட்டாசியில் வழிபடுவதன் மூலம் கூடுதலான பலன்கள் பெறலாம். புரட்டாசியில் பெருமாளை வழிபடுவதால் புதனின் அருளும் சிறப்பாக கிடைக்கும்.



புத்திக்கூர்மை, கற்றல், கற்பித்தல் போன்றவற்றுக்கு அதிபதி புதன். புதன் பகவான், சந்திரனுக்கும் தாரைக்கும் மகனாகப் பிறந்தவர். சகல கலைகளிலும் வல்லவர். மகா ஞானியாக விளங்குபவர். கிரகங்களில் சுபக்கிரகர் என்பதால் இவரை வழிபடுகிறவர்களுக்கு மிகுதியாக அறிவைக் கொடுப்பவர். ஞானமளிப்பவர், வாக்கு சாதுர்யம் அளிப்பவர்.

தீயக்கிரகங்களால் உண்டாகும் பீடைகளை நீக்கும் ஆற்றலுடையவர். எனவே புரட்டாசி மாதத்தில் புதனையும் இவரின் அதிபதி மகாவிஷ்ணுவையும் வழிபடுவதால் சனி, ராகு, கேதுக்களால் உண்டாகும் தோஷங்களை போக்கிக் கொள்ளலாம். புதனின் நட்புக்கிரகம் சனி. இதனை வழிபடுவதால் சனிபகவான் தோஷம் குறையும்.

புரட்டாசி சனிக்கிழமைகளில் வெங்கடேசப் பெருமாளுக்கு மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்வது சிறப்பு தரும். திருப்பதியில் புரட்டாசி சனிக்கிழமைகளில் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பாகும். புரட்டாசியில் கொண்டாடப்படும் திருப்பதி பிரம்மோற்சவம் குறிப்பிடத்தக்கது.

 சூரிய உதயத்தில் எழுந்து குளித்து பெருமாள் சன்னதிக்குச் துளசிமாலை வாங்கி சென்று வழிபட வேண்டும். இனிப்பும், எள்ளும் கலந்து இடித்து காகத்திற்கும் உணவு அளிக்கலாம். இதன் மூலம் சனி தோஷம் விலகுவதாக நம்பிக்கையாகும்.

No comments:

Post a Comment